Entertainment News Live Updates: ஒன்றல்ல.. இரண்டு பாடல்கள்.. விஜய் ஆண்டனி அப்டேட்!
Entertainment News in Tamil, 23 July 2025, Live Updates: அருவி பட இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் 2 பாடல்கள் ஒரே நாளில் வெளியாகும் என படக்குழு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

LIVE NEWS & UPDATES
-
ஃபகத் பாசில் – வடிவேலுவின் மாரீசன் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனம்!
ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள மாரீசன் படம் வருகிற ஜூலை 25, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படம் பத்திரிகையாளர்களுக்காக சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிலையில் பத்திரிகையாளர்கள் மாரீசன் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் அளித்து வருகின்றனர்.
-
100 மில்லியன் வியூஸை அள்ளிய ரெட்ரோ பட கனிமா பாடல்!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படம் கடந்த மே 1, 2025 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற கனிமா பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தப் பாடல் யூடியூபில் 100 மில்லியன் வியூஸை கடந்து சாதனை படைத்திருக்கிறது.
-
நடிகர் சூர்யாவின் பிறந்த நாளில் வெளியான ஸ்பெஷல் போஸ்டர்!
நடிகர் சூர்யா ஜூலை 23, 2025 அன்று தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவர் தற்போது நடித்து வரும் சூர்யா 46 படத்தில் இருந்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஸ்பெஷல் போஸ்டரை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
-
26 கிலோவைக் குறைத்த தயாரிப்பாளர் போனி கபூர் – சீக்ரெட் இதுவா?
நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் 26 கிலோ எடை குறைத்துள்ளார். உடல் எடை குறைந்த நிலையில் அவர் இருக்கும்போட்டோ சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அவர் கலை உணவாக பழங்கள் மற்றும் ஜூஸ் மட்டுமே சாப்பிட்டு வந்திருக்கிறார்.
-
பிறந்த நாளை முன்னிட்டு மனைவி ஜோதிகாவுடன் காளிகாம்பாள் கோவிலில் சாமி தரிசனம்
நடிகர் சூர்யா ஜூலை 23, 2025 அன்று தனது 50வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் அவர் சென்னை காளிகாம்பாள் கோவிலில் மனைவி ஜோதிகாவுடன் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் ரிலீஸ் தேதி புரமோ !
கௌதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி புரமோ ஜூலை 24, 2025 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படதிதில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க, அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
-
தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் டூட் படத்துடன் மோதும் சூர்யாவின் கருப்பு?
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் டீசர் ஜூலை 23, 2025 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படம் பிரதீப் ரங்கநாதனின் டூட் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
படத்தில் நடிப்பதற்காக முன் பணம் பெற்றுக்கொண்டு, நடித்து தராமல் ஏமாற்றுவதாக நடிகர் ரவி மோகன் மீது பாபி டச் கோல்டு யூனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவன்ம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரூ.5.9 கோடிக்கான சொத்து ஆவணஙகளை 4 வாரங்களில் தாக்கல் செய்ய ரவி மோகனுக்கு உத்தரவிட்டுள்ளது.
-
இளையராஜா – வனிதா விஜயகுமார் வழக்கு – சோனி மியூசிக் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி நடித்திருக்கும் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் இளையராஜாவின் சிவராத்திரி பாடலை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் நீதிமன்றத்தில் இது தொடர்பாக விளக்கமளித்த வனிதா, அந்தப் பாடலின் உரிமையை வைத்திருக்கும் சோனி மியூசிக்கிடம் அனுமதி பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் சோனி மியூசிக்கையும் இந்த வழக்கில் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
நடிகர் விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் – பாடல்கள் எப்போது தெரியுமா?
நடிகர் விஜய் ஆண்டனி நடித்து இசையமைத்து வரும் படம் சக்தி திருமகன். இந்தப் படத்தை அருவி, வாழ் உள்ளிட்ட படங்களை இயக்கிய, அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகிற செப்டம்பர் 05, 2025 அன்று வெளியாகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் பாடல்கள் ஜூலை 24, 2025 அன்று வெளியாகிறது.
-
பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயனின் சாமி தரிசனம்!
நடிகர் சிவார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி அருகே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சியில் மிகவும் புகழ்பெற்ற மாசாணியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாசாணியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் நடிகர் சிவகார்த்திகேயனின் போட்டோ
✨ Our #KingSK Annan At Masani Amman Temple – @Siva_Kartikeyan ♥️ #SivaKarthikeyan | #Madharaasi | #ParaSakthi pic.twitter.com/pCTVRxFrRb
— Sivakarthikeyan Fc (@actorsk_fc) July 23, 2025
-
ஒரே நாளில் ரூ. 25 கோடி வசூலித்த சையாரா !
ஆஷிகி 2 போன்ற படங்களை இயக்கிய மோஹித் சூரி இயக்கத்தில் கடந்த ஜூலை ஜூலை 18, 2025 அன்று வெளியான படம் சையாரா. இந்தப் படம் ஜூலை 22, 2025 அன்று ஒரு நாள் மட்டும் ரூ. 25 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் அறிமுக நடிகர்களான ஆஹான் பாண்டே, அனீத் படா ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
-
இசையின் தரம் குறைந்து விட்டது.. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் வருத்தம்
இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானின் பழைய பாடல்களை இன்றளவும் கேட்கிறோம். ஆனால் இப்போது உள்ள பாடல்கள் அப்படியில்லை. இசையின் தரம் குறைந்து விட்டது என இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தெரிவித்துள்ளார். ஒரு பாடலின் 30 விநாடிகள் கொண்ட வரிகள் போதும் ஹிட்டாக்கி விடலாம் என்ற எண்ணம் மாற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
-
சக்தி திருமகன் படத்தில் 2 பாடல்கள் ரிலீஸ் – எப்போது தெரியுமா?
நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வரும் சக்தி திருமகன் படத்தில் இருந்து ஜூலை 24ம் தேதி இரண்டு பாடல்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கி வரும் நிலையில் செப்டம்பர் 5ல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கவர்ச்சி காட்டாமல் என்னால் ஜெயிக்க முடியும்: நடிகை நிதி அகர்வால்
சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் என்னால் ஜெயிக்க முடியும் என நடிகை நிதி அகர்வால் தெரிவித்துள்ளார். இவர் தமிழில் ஈஸ்வரன், கலகத்தலைவன் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். அடுத்ததாக ஜூலை 24ல் பவன் கல்யாண் நடிப்பில் ஹரிஹர வீரமல்லு படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
-
‘தலைவன் – தலைவி’ படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!
விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘தலைவன் – தலைவி’ படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படமானது ஜூலை 25ம் தேதி வெளியாகவுள்ளது.
-
200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்த வாட்டர் பாக்கெட் பாடல்!
நடிகர் தனுஷ் நடிப்பில் மற்றும் இயக்கத்தில் அவரது 50வது படமாக 2024ம் ஆண்டு வெளியான படம் “ராயன்” . ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தில் இடம் பெற்ற வாட்டர் பாக்கெட் பாடல் யூட்யூபில் 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்துள்ளது. இப்படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே.சூர்யா என பலரும் நடித்திருந்தனர்.
-
Pawan Kalyan: முன்பதிவில் சாதனைப் படைத்த பவன் கல்யாணின் ஹரிஹர வீரமல்லு
நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் ஜூலை 24ம் தேதி வெளியாகும் ஹரிஹர வீரமல்லு படத்தை ஜோதி கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இப்படத்தில் நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். இதனிடையே இந்த படம் முன்பதிவில் மட்டும் சுமார் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Rajinikanth: ரஜினியுடன் 50 வருட நட்பு.. நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த மோகன்பாபு
சென்னையில் பிளாட்பாரத்தில் இருந்தபோதே நடிகர் ரஜினியை எனக்கு தெரியும். ஒன்றுமில்லாத நிலையில் தான் நாங்கள் சந்தித்தோம். ரஜினியை எங்கு சந்தித்தாலும் பிளடி தலைவா என்று தான் அழைப்பேன் என பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு கூறியுள்ளார்.
-
சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள்
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு நூற்றக்கணக்கான ரசிகர்கள் கூடி வாழ்த்து தெரிவித்தனர். அவர்களை காண வந்த சூர்யா அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.
-
மதுரையில் அளவுக்கதிகமாக பரோட்டா சாப்பிட்ட நித்யா மேனன்!
பாண்டிராஜ் இயக்கத்தில் ஜூலை 25ம் தேதி தலைவன் – தலைவி படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நித்யாமேனன் – விஜய் சேதுபதி ஜோடி நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் மதுரையில் நடந்தபோது, தன்னால் நாக்கை கட்டுப்படுத்த முடியாமல் அளவுக்கதிகமாக பரோட்டா சாப்பிட்டதாக நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்.
-
Bindu Madhavi: மீண்டும் தமிழ் சினிமாவில் பிந்து மாதவி.. ரசிகர்கள் மகிழ்ச்சி
பொக்கிஷம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களிடையே நீங்கா இடம் பிடித்துள்ள நடிகை பிந்து மாதவி 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார்.விரைவில் அவர் நடிப்பில் சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் படம் வெளியாகவுள்ளது.
-
தமிழ் சினிமாவில் தான் அதிகம் ஆதரவு.. ஷில்பா மஞ்சுநாத் நெகிழ்ச்சி
நான் மற்ற மொழி படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் தான் அதிகம் ஆதரவு உள்ளதாக நடிகை ஷில்பா மஞ்சுநாத் தெரிவித்துள்ளார். வெற்றி நடிக்கும் சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் பட விழாவில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
-
சொந்த வீட்டில் தான் துன்புறுத்தல்.. நடிகை தனுஸ்ரீ தத்தா பரபரப்பு குற்றச்சாட்டு
தமிழில் விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக நடித்த தனுஸ்ரீ தத்தா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது சொந்த வீட்டில் தான் துன்புறுத்தப்படுவதாகவும், தனக்கு யாராவது உதவ வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
-
ரீ- கிரியேட் செய்யப்பட்ட கஜினி பட காட்சி.. சூர்யா ரசிகர்கள் ஹேப்பி!
நடிகர் சூர்யா இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்து வரும் கருப்பு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் சூர்யாவின் கஜினி படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி ரீ-கிரியேட் செய்யப்பட்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Karuppu Teaser: நடிகர் சூர்யாவின் “கருப்பு” பட டீசர் ரிலீஸ்!
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் கருப்பு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு டீசர் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
கருப்பு பட டீசர்
Karuppu teaser for you! https://t.co/PaWz9k35Wc#கருப்பு #Karuppu @trishtrashers @dop_gkvishnu #VikramMor @kalaivananoffl #ArunVenjaramoodu @SaiAbhyankkar @RJ_Balaji @prabhu_sr @KaruppuMovie @DreamWarriorpic pic.twitter.com/FevQf1AvPf
— Suriya Sivakumar (@Suriya_offl) July 23, 2025
-
5000 தியேட்டர்கள் கிடைக்குமா?
கூலி ரிலீஸ் ஆகும் அதே நாளில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்துள்ள வார் 2 திரைப்படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கூலி படத்துக்கு 5000 திரையரங்குகள் கிடைக்குமா என்பது சந்தேகமே. அப்படி கிடைத்தால் மட்டுமே நினைத்த வசூலை ஈட்ட முடியும்
-
கூலி வசூல் – டார்கெட் இதுதானா?
கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்திய அளவில் 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முதல் நாளிலேயே அதிகபட்ச வசூலை ஈட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
-
கூலி ரிலீஸ்.. தொடரும் வேலைகள்
கூலி படத்தின் 2 பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படம் திரைக்கு வருகிறது. அதற்கான புரமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
-
Coolie Movie : கூலி படத்தில் கமல்ஹாசனா? பரவும் தகவல்
ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கமல்ஹாசன் பங்கும் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கமல் ஒருவருக்கு டப்பிங் பேசி இருப்பதாக சொல்லப்படுகிறது. இது இன்னும் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது
-
இறுதிக்கட்ட வேலையில் கருப்பு!
நடிகர் சூர்யாவின் இந்த கருப்பு திரைப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது. இந்த படத்திற்காக இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.
-
Karuppu Teaser : கருப்பு பட டீசர் அப்டேட்
சூர்யாவின் 50வது பிறந்தநாள் என்பதால், கருப்பு படத்திலிருந்து முதல் பார்வையைப் படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த முதல் பார்வையானது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இன்று டீசர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கருப்பு பட அப்டேட்
Let the festivities begin !!!🔥#Karuppu teaser from tomorrow
10 AM !!! 🔥 pic.twitter.com/qemzyjdIKI— RJB (@RJ_Balaji) July 22, 2025
-
Suriya Birthday : சூர்யா பிறந்தநாள்.. ரசிகர்கள் கொண்டாட்டம்
நடிகர் சூர்யாவின் 50வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல இடங்களில் ரசிகர்கள் சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டம் நடைபெற்றது
ஜூலை 23ம் தேதியான இன்று நடிகர் சூர்யாவின் ( Suriya Birthday) 50வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் சூர்யாவை புகழ்ந்து வீடியோக்களையும், போட்டோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யாவின் பர்த்டே ட்ரீட்டாக கருப்பு படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் ரிலீஸ் நேரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் டீசர் 2025, ஜூலை 23ம் தேதியில் காலை 10 மணி அளவில் வெளியாகவுள்ளது. இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. கோலிவுட்டின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள படமாக கூலி (Coolie movie) உள்ளது. அதிக நாடுகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய விநியோகஸ்தர்கள் திட்டமிட்டு வருகின்றனர். இதற்கிடையே கூலி படத்தில் கமல்ஹாசன் சிறப்பு வேலை ஒன்று செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. இது படத்துக்கு மேலும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இவைபோக, புதுப்பட ரிலீஸ்கள், ஓடிடி பட அப்டேட்கள் என கோலிவுட்டின் செய்திகள் மற்றும் சினிமா சார்ந்த அப்டேட்களை இப்பகுதியில் உடனுக்குடன் பார்க்கலாம்.
மேலும் சினிமா செய்திகளை இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்
Published On - Jul 23,2025 8:01 AM