Entertainment News Live Updates: என் அடுத்த படம் அஜித் சாருடன் தான்… இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அதிரடி!
Entertainment News in Tamil, 19 July 2025, Live Updates: நடிகர் அஜித்குமாரின் அடுத்த படத்தை இயக்கவிருப்பதாகவும் இந்தப் படம் குட் பேட் அக்லி படத்தில் இருந்து மாறுபட்ட கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் என இயக்குந் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அஜித் குமார் - தனுஷ்
சினிமா என்பது பலரின் பொழுதுபோக்காக உள்ளது. உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை வெளியாகும் படங்களுக்கு என கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் . ஒவ்வொரு நாளும் திரை துறையில் பல்வேறு விதமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. வார இறுதியில் வெளியாகும் படங்கள் தொடங்கி ஓடிபி தளத்தில் ரிலீஸ் ஆகும் படங்கள், விரைவில் ரிலீஸ் ஆக உள்ள படங்கள், புதிதாக அறிவிக்கப்பட்ட படங்கள், புதிய படங்களின் ரிலீஸ் தேதி உள்ளிட்ட அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருக்கும். இதில் தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் அது தொடங்கிய காலகட்டத்தில் இருந்து தொழில்நுட்ப வளர்ச்சியால் மாறி உள்ள தற்போது காலகட்டம் வரை ஒவ்வொரு நாளும் புதுப்புது கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப வசதிகள், வியக்க வைக்கும் மாயாஜாலங்கள் ஆகியவை திரையின் வழியாக மக்களுக்கு காட்டப்படுகிறது. எழுத்து இயக்கம், கவிஞர் நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர் ஒளிப்பதிவாளர் கிராபிக்ஸ் டிசைனர் ஒலி வடிவமைப்பாளர், என ஏகப்பட்ட துறைகள் ஒரு படத்திற்காக உழைத்து அதனை மக்களிடம் சமர்ப்பிக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. தமிழ் சினிமா உலக நாடுகள் வரை பேசப்படும் அளவிற்கு படங்களை தயாரித்து வந்திருக்கிறது. இந்திய சினிமாவை எடுத்துக் கொண்டால் இந்தி சினிமாவிற்கு அடுத்ததாக அனைவரின் பார்வையும் தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய துறையாக விளங்கும் தமிழ் சினிமாவின் மீதுதான் இருக்கும். அனைத்து மொழி பிரபலங்களும் தமிழ் மொழியில் படங்களில் நடித்து தங்களது திறமைகளை நிரூபித்துள்ளனர். அதேபோல் தமிழ் சினிமாவைச் சார்ந்த பிரபலங்களும் மற்ற மொழிகளிலும் நடிக்க பெற்று பாராட்டுகளை குவித்துள்ளனர். இப்படி இந்திய சினிமா மொழிகளால் பிரிக்கப்பட்டு இருந்தாலும் வெளியில் இருந்து பார்க்கும்போது உலக சினிமாவுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு மகத்தான சாதனைகளை தன்னுள்ளே கொண்டிருக்கிறது என சொல்லலாம். அத்தகைய சினிமாவின் அப்டேட்டுகள் பற்றி காணலாம்.
சினிமா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் காண இங்கு கிளிக் செய்யவும்
LIVE NEWS & UPDATES
-
பிறந்த நாளில் ரத்த தானம் செய்த ரசிகர்களுக்கு விருந்தளித்த நடிகர் கார்த்தி!
தனது பிறந்த நாளில் ரத்த தானம் செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் கார்த்தி விழா ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில் ரத்த தானம் செய்த 250 ரசிகர்களுக்கு விருந்தளித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரத்த தானம் செய்த ரசிகர்களுக்கு விருந்தளித்த நடிகர் கார்த்தி
When our Mr.Versatile @Karthi_Offl Anna met and greeted fans who donated blood on his birthday 😍❤️. Such meet ups only encourage us to do more good deeds , love you Na 😍#Karthi pic.twitter.com/ls2gjbdVGO
— The Karthi Team (@TheKarthiTeam) July 19, 2025
-
வேலு பிரபாகரனின் ‘கடவுள்’ தான் ஆமிர் கானின் ‘பிகே’ படத்துக்கு இன்ஸ்பிரேஷன் – சத்யராஜ்!
மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குருமான வேலு பிராபகரனின் உடலுக்கு நடிகர் சத்யராஜ் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அவரது ஒளிப்பதிவு செய்த பிக்பாக்கெட் படத்தில் ஹீரோவாக நடித்தேன். அப்போது பெரியார் குறித்த புத்தகத்தை எனக்கு அளித்தார். மேலும் அவர் இயக்கிய கடவுள் படத்தை அடிப்படையாக வைத்து தான் ஆமிர் கானின் பிகே படம் உருவானது. இதற்காக பிகே படக்குழுவினர் வேலு பிரபாகரனிடம் அனுமதி வாங்கியிருக்கிறார்கள் என்று பேசினார்.
-
வாடகை வீட்டில் வசிக்கும் சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது வாடகை வீட்டில் வசிப்பதாக கூறப்படுகறது. பனையூரில் இருக்கும் தனது வீட்டை இடித்துவிட்டு அங்கு நவீன வசதிகளுடன் கூடிய பிரம்மாண்ட வீட்டை கட்ட முடிவெடுத்துள்ளாராம். இதற்காக அவர் தயாரிப்பாளர் போனி கபூருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசிப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
-
ஃபகத் பாசில் – வடிவேலுவின் மாரீசன் – யுவன் குரலில் வெளியான பாடல்!
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தங்களது 99வது படமாக தயாரித்துள்ள படம் மாரீசன். இந்தப் படத்தில் மாமன்னன் படத்துக்கு பிறகு ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து ஏற்கனவே FaFa பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்தப் படத்தில் இருந்து மாரீசா என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை யுவன் ஷங்கர் ராஜாவே பாடியிருக்கிறார்.
மாரீசா பாடல் குறித்து சரிகமா வெளியிட்டுள்ள பதிவு
Let The Mellow Waves Hit You! The Second Single #Maareesa From #Maareesan is Out Now! 😍🏍️
🎶 🎙️@thisisysr
✍🏻 #SabarivasanShanmugam#FaFa #FahadhFaasil #Vadivelu @SuperGoodFilms_ #SudheeshSankar @actorvivekpra @krishnakum25249 @moorthyisfine… pic.twitter.com/qJb2YnBXEO— Saregama South (@saregamasouth) July 19, 2025
-
23 வருடங்களை நிறைவு செய்த விஜய்யின் யூத்!
நடிகர் விஜய், சந்தியா, விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி வெளியான யூத் திரைப்படம் வெளியாகி 23 வருடங்களை நிறைவு செய்துள்ளது. மணிசர்மா இசையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற ஆல்தோட்ட பூபதி, சர்க்கரை நிலவே ஆகிய பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
-
மதர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட லிங்குசாமி!
பிரியமுடன், யூத், ஜித்தன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் வின்சென்ட் செல்வா. நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள படம் மதர். இந்தப் படத்தை சரிஷ் இயக்கியுள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டார்.
மதர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட லிங்குசாமி
Happy in releasing the first look of #Mother@uie_offl #thambiramaiah @sarishvps @itsme_arthika @ssenthilu
@arunraj_poothanal #RESARENTERPRISESBest wishes to Vincent selva brother, Rupan, sarish & the entire team. #MotherMovie #MotherFirstLook pic.twitter.com/vY21vjUI2c
— Lingusamy (@dirlingusamy) July 19, 2025
-
வெளியானது எஸ்.ஜே.சூர்யாவின் கில்லர் ஃபர்ஸ்ட் லுக்!
நடிகர் எஸ்.ஜே.சூர்யா நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கி நடித்திருக்கும் படம் கில்லர். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட கில்லர் பட ஃபர்ஸ்ட் லுக்
EN ANBUM AARUYIRUMAANA Fans & Friends 🥰🥰🥰💐💐💐Presenting U the #KillerFirstLook as My Birthday gift to all of U 🥰🥰🥰, Tomorrow Morning all of U keep me in your prayers🙏🙏🙏and I will keep U all in my prayers as always 😍😍😍🙏🙏🙏🥰sjs @arrahman@GokulamGopalan… pic.twitter.com/oBwoJqYgcE
— S J Suryah (@iam_SJSuryah) July 19, 2025
-
ஒன்ஸ்மோர் படத்தில் இருந்து வெளியான மீண்டுமா பாடல்!
அர்ஜூன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்துள்ள ஒன்ஸ்மோர் படத்தை விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இருந்து ஏற்கனவே வா கண்ணம்மா என்ற பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டான நிலையில் இந்தப் படத்தில் இருந்து மீண்டுமா என்ற பாடல் வெளியாகியுள்ளது. ஹேசம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இந்தப் பாடலை ஆவனி மல்ஹர் பாடியுள்ளார்.
ஒன்ஸ்மோர் படத்தில் இருந்து வெளியான மீண்டுமா பாடல்
Un kobam maaruma…
Some wounds need just one song to reopen.#Meenduma is here. Listen now 🎧Video Song 🔗 https://t.co/qOGLcqsOIQ
Straight from the soul, into yours ❤️✨
Vocals – #AavaniMalhar🎙️Written & directed by @isrikanthmv ✨
A @heshamawmusic musical 🎶… pic.twitter.com/o6P6ascAkQ— Think Music (@thinkmusicindia) July 19, 2025
-
என் மகன் என்னுடன் தான் இருக்கிறார்….. நா.முத்துக்குமாரின் அப்பா உருக்கம்!
நா.முத்துக்குமாரின் நினைவு இசை நிகழ்ச்சி ஆகஸ்ட் 19, 2025 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவர் பாடல் எழுதிய பாடல்கள் பாடப்டும். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் ராம், விஜய் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்த நிகழச்சியில் நா.முத்துக்குமாரின் அப்பா கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், என் மகன் என்னுடன் தான் இருக்கிறார் என பேசியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.
-
வெளியானது ஜி.வி.பிரகாஷ் – ஸ்ரீகாந்த்தின் பிளாக்மெயில் டிரெய்லர்!
மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீகாந்த், தேஜு அஸ்வினி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிளாக்மெயில் இந்தப் படம் வருகற ஆகஸ்ட் 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
-
ராமனாக சூர்யா… சீதையாக ஆலியா பட் – நடிகர் விஷ்ணு மஞ்சு பகிர்ந்த சுவாரசியத் தகவல்
கண்ணப்பா என்ற பான் இந்திய படத்தில் ஹீரோவாக நடித்திருந்த விஷ்ணு மஞ்சு சமீபத்தில் அளித்த பேட்டியில் சுவாரசியத் தகவலை பகிர்ந்திருக்கிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு ராவணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் ஒன்றை உருவாக்கவிருந்ததாக அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ராமன் கதாப்பாத்திரத்தில் சூர்யாவை நடிக்க வைக்க அவருடன் பேசியதாகவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த நேரத்தில் பட்ஜெட் அதிகமாக இருந்த காரணத்தால் தங்களால் அந்தப் படத்தை தொடர முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
-
ஒரே நாளில் வெளியாகும் அனுஷ்காவின் ‘காதி’ – ராஷ்மிகாவின் தி ‘கேர்ள்ஃபிரெண்ட்’?
தென்னிந்திய அளவில் இருக்கும் பிரபல நடிகைகளான அனுஷ்கா மற்றும் ராஷ்மிகாவின் படங்கள் ஒரே தேதியில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுஷ்கா லீட் ரோலில் நடித்துள்ள காதி படமும், ராஷ்மிகாவின் தி கேர்ள் ஃபிரெண்ட் படமும் வருகிற செப்டம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
-
விஜயகாந்த் சார் மாதிரி விஷால் – நடிகர் விக்னேஷ் புகழாரம்!
ரெட்ஃபிளவர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விக்னேஷ், விஷால் ஒரு சிறந்த மனிதர், உதவி செய்வதில் அவர் முதல் ஆளாக இருப்பார். நடிகர் சங்கத்தில் சிறிய நடிகராக இருந்தாலும் சரி, பெரிய ஸ்டாராக இருந்தாலும் சரி அனைவரையும் சமமாக நடத்துவார். நான் அந்த மாதிரி விஜயகாந்த் சாரை பார்த்திருக்கிறேன். அவரைப் போலவே விஷாலும் எந்த பிரச்னை என்றாலும் தைரியமாக இறங்கி சரி செய்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
திரைப்பட விமர்சனங்கள்… விஷாலின் கருத்துக்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் மறுப்பு
நடிகர் விஷால் திரைப்படங்கள் வெளியான முதல் 3 நாள் விமர்சனம் செய்யக் கூடாது என நடிகர் விஷால் பேசிய நிலையில் அவருக்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் மறுப்பு தெரிவித்துள்ளார். பிளாக்மெயில் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், யூடியூப் சேனல்கள் விமர்சனம் செய்யவில்லை என்றால் நிறைய படங்கள் வெளியாவதே மக்களுக்கு தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
-
தேவாவின் இசையில் மு.க.முத்து பாடிய பாடல் எது தெரியுமா?
மறைந்த மு.க.முத்து தமிழ் சினிமாவில் பிள்ளையோ பிள்ளை, நம்பிக்கை நட்சத்திரம், சமையல்காரன் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் அவர் தேவாவின் இசையில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான மாட்டுத்தாவணி என்ற படத்தில் மு.க.முத்து பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார்.
-
கிங் படப்பிடிப்பில் நடிகர் ஷாருக்கானுக்கு காயம்!
பிரபல நடிகர் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கபட்ட போது நடிகர் ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர் ஒரு மாதம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர்.
-
அப்செட்டாக இருக்கும் போது செய்யும் விஷயங்கள்… கீர்த்தி சுரேஷ் சுவாரசியத் தகவல்!
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் அப்செட்டாக இருந்தால் செய்யும் விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். அதில் எனக்கு மனது சரியில்லை என்றால் நான் நன்றாக சாப்பிடுவேன். இல்லையென்றால் காரில் நீண்ட தூரம் பயணிப்பேன். அப்போது மகிழ்ச்சியான பாடல்களைக் கேட்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
காவல் நிலைய சித்திரவதையை வைத்து எடுக்கப்பட்ட படம் பாபநாசம்? – ஜீத்து ஜோசப்
திரிஷ்யம் படத்தை தமிழில் பாபநாசம் என்ற பெயரில் இயக்கியதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஜீத்து ஜோசஃப். இவர் ஆனந்த விகடன் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது பேசிய அவர் போலீஸ் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை தவறாக புரிஞ்சிக்கிறாங்க. காவல்நிலைய சித்ரவதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் திரிஷ்யம் என பேசியுள்ளார்.
-
எனது அடுத்தப் படம் அஜித் சாருடன் தான்…. ஆதிக் ரவிச்சந்திரன் அதிரடி!
நடிகர் அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கவிருப்பதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், என்னுடைய அடுத்தப் படம் அஜித் சாருடன் தான். ஏகே 64 படத்தை இயக்கவிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அந்தப் படம் குட் பேட் அக்லியில் இருந்து வித்தியாசமான படமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
-
யுவன் குரலில் மாரீசன் பட இரண்டாவது பாடல்!
ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள மாரீசன் படம் வருகிற ஜூலை 25, 2025 அன்று வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து ஏற்கனவே FaFa பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் யுவன் குரலில் தி சில்லி ரைட் என்ற பாடல் ஜூலை 19, 2025 அன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
மாரீசன் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட்
Get Ready For The Chill Ride! The Second Single From #Maareesan Drops Today at 5.04 PM! 😍
🎶 🎙️@thisisysr #FaFa #FahadhFaasil #Vadivelu @SuperGoodFilms_ #SudheeshSankar @actorvivekpra @krishnakum25249 @moorthyisfine @dopkalai @sreejithsarang @madhankarky @sampathannamala… pic.twitter.com/P7eQ67lj3s
— Saregama South (@saregamasouth) July 19, 2025
-
கவின் – பிரியங்கா மோகன் இணையும் படம் – கதை என்ன தெரியுமா?
நடிகர் கவின், பிரியங்கா மோகன் இணையும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தை கனா காணும் காலங்கள் மற்றும் கட்சி சேரா பாடலை இயக்கிய கென் ராய்சன் இயக்குகிறார். இந்த நிலையில் இந்தப் படத்தின் கதை ஒரு ஃபேண்டஸி காதல் கதையாக உருவாகி வருவதாக தெரிவித்தார்.
-
சீதையாக சாய் பல்லவிக்கு முன் நான் நடிக்க வேண்டியது… – ஸ்ரீநிதி ஷெட்டி பேட்டி
ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் ராமாயணம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மற்றொரு பக்கம், ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சீதையாக நடிப்பதற்காக தான் ஆடிசனில் பங்கேற்றதாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தெரிவித்திருக்கிறார். மேலும் சாய் பல்லவி அந்த வேடத்துக்கு சரியாக பொறுந்துவார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
-
தொடர்ந்து வெற்றிநடை போடும் 3 BHK படம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி
நடிகர் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 3 BHK படம் 3வது வாரமாக ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஸ்ரீ கணேஷ் இயக்கிய இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
-
Idli Kadai: இட்லி கடை படத்தின் முதல் பாடல் எப்போது? – வெளியான தகவல்
தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இட்லி கடை படத்தின் முதல் பாடல் அவரது பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். நித்யாமேனன், அருண் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
DNA OTT Release: இணையத்தில் வரவேற்பை பெறும் அதர்வாவின் டி. என்.ஏ படம்
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி தியேட்டரில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற DNA படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசாகியுள்ளது. இது ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.
-
Kuberaa OTT Release: ஓடிடியில் வெளியான குபேரா.. ரசிகர்கள் கொடுத்த விமர்சனம்
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ்,நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான குபேரா படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாகியுள்ளது. இந்த படம் ஓடிடியில் கலவையான விமர்சனத்தைப் பெற்று வருவதால் படக்குழுவினர் கலக்கமடைந்துள்ளனர்.
-
ஜெனிலியாவை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் ராஜமௌலி.. ஏன் தெரியுமா?
நடிகை ஜெனிலியா நீண்ட இடைவெளிக்குப் பின் தெலுங்கில் ஸ்ரீலீலா நடித்துள்ள ஜூனியர் என்ற படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இயக்குநர் ராஜமௌலி, எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் நீ அப்படியே இருக்கிறாய் என அவரை புகழ்ந்து தள்ளினார்.
-
90ஸ் கிட்ஸ்களின் பிரபலமான ஹீரோயின் மாளவிகா பிறந்தநாள்.. குவியும் வாழ்த்து
90களின் காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்தவர் மாளவிகா. தற்போது சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
-
எஸ்.ஜே.சூர்யாவின் கில்லர் படம்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று ரிலீஸ்
நீண்ட வருட இடைவெளிக்குப் பின் இயக்குநராக எஸ்.ஜே.சூர்யா, கில்லர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஜூலை 19) மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
2026ம் ஆண்டு படம் ரிலீஸ்.. ஓராண்டுக்கு முன்பே விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்
கிறிஸ்டோபர் நோலன் இயக்கி வரும் தி ஒடிஸி படம் 2026ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் சில ஐமேக்ஸ் தியேட்டர்களில் இப்போதே இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Maareesan: ரிலீசுக்கு தயாரான மாரீசன் படம்.. தியேட்டர் உரிமையை கைப்பற்றிய நிறுவனம்
சுதீஷ் ஷங்கர் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள மாரீசன் படம் வரும் ஜூலை 25ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை தியா மூவிஸ் கைப்பற்றியுள்ளது.
-
பைசன் படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை கைப்பற்றிய நிறுவனம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை பைவ் ஸ்டார் கதிரேசன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடிக்கும் இப்படம் 2025 தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
Bun Butter Jam: பன் பட்டர் ஜாம் படத்தில் இருந்து வானவில்லே பாடல் ரிலீஸ்
பிக்பாஸ் ராஜூ நடித்துள்ள பன் பட்டர் ஜாம் படத்தில் இருந்து வானவில்லே பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இப்படம் ஜூலை 18ம் தேதி தியேட்டரில் வெளியான நிலையில் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது.
-
ரத்தம் தெறிக்கும் ஒரு ஆக்ஷன் படம்.. இயக்குநர் பிரேம்குமார் தகவல்
நடிகர் விக்ரமுடன் தான் இணையும் படம் ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என இயக்குநர் பிரேம் குமார் தெரிவித்துள்ளார். வேல்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது. பிரேம்குமார் ‘96’ மற்றும் ‘மெய்யழகன்’ ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கவின் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் அப்டேட்.. இயக்குநர் கென் ராய்சன் தகவல்
கென் ராய்சன் இயக்கத்தில் கவின் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் பேண்டஸி கலந்த ரொமான்ஸ் மற்றும் காமெடி படமாக இருக்கும் என இயக்குநர் கூறியுள்ளார்.
-
Sivakarthikeyan: பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவானது இப்படித்தான்!
தனது இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக தேர்வு செய்தது எப்படி என்பதை சுதா கொங்காரா வெளிப்படுத்தியுள்ளார். நிச்சயம் சிவகார்த்திகேயன் அந்த கேரக்டருக்கு பொருத்தமானவர் தான். அவரின் பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம் சரியாக இருப்பார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
-
Venkat Prabhu: வெங்கட் பிரபு படத்துக்கு இசையமைக்கும் அனிருத்!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு, விரைவில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து படம் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக வெங்கட் பிரபு படங்களில் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Keerthy Suresh: நான் அப்செட் ஆனால் இதை செய்வேன்.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழும் கீர்த்தி சுரேஷ், தான் அப்செட் ஆக இருக்கும் நேரங்களில் நன்றாக சாப்பிடுவேன் என கூறியுள்ளார். மேலும் காரை எடுத்துக் கொண்டு தனியாக ஓட்டிச் செல்வேன் எனவும் கூறியுள்ளார்.
-
Parasakthi: ஜனநாயகன் படத்துடன் பராசக்தி மோதலா? – சுதா கொங்கரா விளக்கம்!
நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் 2026, ஜனவரி 9ம் தேதி ரிலீசாகிறது. இதே நாளில் நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் வெளியாகும் என்ற தகவலுக்கு அப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா பதிலளித்துள்ளார். பராசக்தி ரிலீஸ் தேதியை தயாரிப்பு தரப்பு முடிவு செய்யும் என கூறியுள்ளார்.
-
Baashha Re-Release: பாட்ஷா படம் ரீ- ரிலீஸ்.. கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்!
நடிகர் ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த “பாட்ஷா” படம் வெளியாகி 37 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். பலரும் படம் இன்றும் பார்க்கும் அளவுக்கு பிரெஷ்ஷாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
-
Bad Girl பட டீசரை நீக்க வேண்டும்.. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Bad Girl பட டீசரை, சமூக ஊடகங்களில் இருந்து நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இது போன்ற ஆபாச காட்சிகள் பதிவேற்றம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
Once More: அர்ஜூன் தாஸ், அதிதி ஷங்கர் டூயட் பாடல் .. இன்று வெளியீடு
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “ஒன்ஸ் மோர்”. இந்த படத்தில் அர்ஜூன் தாஸ், அதிதி ஷங்கர் ஜோடியாக நடித்துள்ளனர். ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து வரும் இந்த படத்தில் இருந்து 3வது பாடல் இன்று (ஜூலை 19) மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Kuberaa OTT Release: ஓடிடியில் வெளியான குபேரா… ரசிகர்களிடம் கிடைத்த விமர்சனம்
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர்கள் நாகார்ஜூனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்த குபேரா படம் அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படம் கலவையான விமர்சனத்தை ஓடிடியில் பெற்றுள்ளதால் படக்குழு சற்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.