Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Entertainment News Live Updates: இட்லி கடை படத்தின் அடுத்த தகவல்.. குஷியான ரசிகர்கள்

Entertainment News in Tamil, 19 July 2025, Live Updates: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள தனுஷ் அடுத்ததாக இட்லி கடை என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 19 Jul 2025 15:00 PM
Entertainment News Live Updates: இட்லி கடை படத்தின் அடுத்த தகவல்.. குஷியான ரசிகர்கள்
சினிமா செய்திகள்

LIVE NEWS & UPDATES

  • 19 Jul 2025 03:00 PM (IST)

    எனது அடுத்தப் படம் அஜித் சாருடன் தான்…. ஆதிக் ரவிச்சந்திரன் அதிரடி!

    நடிகர் அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கவிருப்பதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், என்னுடைய அடுத்தப் படம் அஜித் சாருடன் தான். ஏகே 64 படத்தை இயக்கவிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அந்தப் படம் குட் பேட் அக்லியில் இருந்து வித்தியாசமான படமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

  • 19 Jul 2025 02:48 PM (IST)

    யுவன் குரலில் மாரீசன் பட இரண்டாவது பாடல்!

    ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள மாரீசன் படம் வருகிற ஜூலை 25, 2025 அன்று வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து ஏற்கனவே FaFa பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் யுவன் குரலில் தி சில்லி ரைட் என்ற பாடல் ஜூலை 19, 2025 அன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

    மாரீசன் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட்

     

  • 19 Jul 2025 02:30 PM (IST)

    கவின் – பிரியங்கா மோகன் இணையும் படம் – கதை என்ன தெரியுமா?

    நடிகர் கவின், பிரியங்கா மோகன் இணையும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தை கனா காணும் காலங்கள் மற்றும் கட்சி சேரா பாடலை இயக்கிய கென் ராய்சன் இயக்குகிறார். இந்த நிலையில் இந்தப் படத்தின் கதை ஒரு ஃபேண்டஸி காதல் கதையாக உருவாகி வருவதாக தெரிவித்தார்.

    Read More… 

  • 19 Jul 2025 02:16 PM (IST)

    சீதையாக சாய் பல்லவிக்கு முன் நான் நடிக்க வேண்டியது… – ஸ்ரீநிதி ஷெட்டி பேட்டி

    ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் ராமாயணம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மற்றொரு பக்கம், ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சீதையாக நடிப்பதற்காக தான் ஆடிசனில் பங்கேற்றதாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தெரிவித்திருக்கிறார். மேலும் சாய் பல்லவி அந்த வேடத்துக்கு சரியாக பொறுந்துவார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

  • 19 Jul 2025 02:07 PM (IST)

    தொடர்ந்து வெற்றிநடை போடும் 3 BHK படம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

    நடிகர் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 3 BHK படம் 3வது வாரமாக ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஸ்ரீ கணேஷ் இயக்கிய இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

  • 19 Jul 2025 01:44 PM (IST)

    Idli Kadai: இட்லி கடை படத்தின் முதல் பாடல் எப்போது? – வெளியான தகவல்

    தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இட்லி கடை படத்தின் முதல் பாடல் அவரது பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். நித்யாமேனன், அருண் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 19 Jul 2025 01:25 PM (IST)

    DNA OTT Release: இணையத்தில் வரவேற்பை பெறும் அதர்வாவின் டி. என்.ஏ படம்

    நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி தியேட்டரில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற DNA படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசாகியுள்ளது. இது ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.

  • 19 Jul 2025 01:05 PM (IST)

    Kuberaa OTT Release: ஓடிடியில் வெளியான குபேரா.. ரசிகர்கள் கொடுத்த விமர்சனம்

    சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ்,நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான குபேரா படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாகியுள்ளது. இந்த படம் ஓடிடியில் கலவையான விமர்சனத்தைப் பெற்று வருவதால் படக்குழுவினர் கலக்கமடைந்துள்ளனர்.

  • 19 Jul 2025 12:45 PM (IST)

    ஜெனிலியாவை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் ராஜமௌலி.. ஏன் தெரியுமா?

    நடிகை ஜெனிலியா நீண்ட இடைவெளிக்குப் பின் தெலுங்கில் ஸ்ரீலீலா நடித்துள்ள ஜூனியர் என்ற படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இயக்குநர் ராஜமௌலி, எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் நீ அப்படியே இருக்கிறாய் என அவரை புகழ்ந்து தள்ளினார்.

  • 19 Jul 2025 12:25 PM (IST)

    90ஸ் கிட்ஸ்களின் பிரபலமான ஹீரோயின் மாளவிகா பிறந்தநாள்.. குவியும் வாழ்த்து

    90களின் காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்தவர் மாளவிகா. தற்போது சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • 19 Jul 2025 12:05 PM (IST)

    எஸ்.ஜே.சூர்யாவின் கில்லர் படம்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று ரிலீஸ்

    நீண்ட வருட இடைவெளிக்குப் பின் இயக்குநராக எஸ்.ஜே.சூர்யா, கில்லர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஜூலை 19) மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 19 Jul 2025 11:50 AM (IST)

    2026ம் ஆண்டு படம் ரிலீஸ்.. ஓராண்டுக்கு முன்பே விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்

    கிறிஸ்டோபர் நோலன் இயக்கி வரும் தி ஒடிஸி படம் 2026ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் சில ஐமேக்ஸ் தியேட்டர்களில் இப்போதே இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 19 Jul 2025 11:30 AM (IST)

    Maareesan: ரிலீசுக்கு தயாரான மாரீசன் படம்.. தியேட்டர் உரிமையை கைப்பற்றிய நிறுவனம்

    சுதீஷ் ஷங்கர் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள மாரீசன் படம் வரும் ஜூலை 25ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை தியா மூவிஸ் கைப்பற்றியுள்ளது.

  • 19 Jul 2025 11:10 AM (IST)

    பைசன் படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை கைப்பற்றிய நிறுவனம்

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை பைவ் ஸ்டார் கதிரேசன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடிக்கும் இப்படம் 2025 தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 19 Jul 2025 10:50 AM (IST)

    Bun Butter Jam: பன் பட்டர் ஜாம் படத்தில் இருந்து வானவில்லே பாடல் ரிலீஸ்

    பிக்பாஸ் ராஜூ நடித்துள்ள பன் பட்டர் ஜாம் படத்தில் இருந்து வானவில்லே பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இப்படம் ஜூலை 18ம் தேதி தியேட்டரில் வெளியான நிலையில் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது.

  • 19 Jul 2025 10:35 AM (IST)

    ரத்தம் தெறிக்கும் ஒரு ஆக்‌ஷன் படம்.. இயக்குநர் பிரேம்குமார் தகவல்

    நடிகர் விக்ரமுடன் தான் இணையும் படம் ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கும் என இயக்குநர் பிரேம் குமார் தெரிவித்துள்ளார். வேல்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது. பிரேம்குமார் ‘96’ மற்றும் ‘மெய்யழகன்’ ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 19 Jul 2025 10:15 AM (IST)

    கவின் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் அப்டேட்.. இயக்குநர் கென் ராய்சன் தகவல்

    கென் ராய்சன் இயக்கத்தில் கவின் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் பேண்டஸி கலந்த ரொமான்ஸ் மற்றும் காமெடி படமாக இருக்கும் என இயக்குநர் கூறியுள்ளார்.

  • 19 Jul 2025 09:55 AM (IST)

    Sivakarthikeyan: பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவானது இப்படித்தான்!

    தனது இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக தேர்வு செய்தது எப்படி என்பதை சுதா கொங்காரா வெளிப்படுத்தியுள்ளார். நிச்சயம் சிவகார்த்திகேயன் அந்த கேரக்டருக்கு பொருத்தமானவர் தான். அவரின் பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம் சரியாக இருப்பார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

  • 19 Jul 2025 09:30 AM (IST)

    Venkat Prabhu: வெங்கட் பிரபு படத்துக்கு இசையமைக்கும் அனிருத்!

    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு, விரைவில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து படம் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக வெங்கட் பிரபு படங்களில் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 19 Jul 2025 09:10 AM (IST)

    Keerthy Suresh: நான் அப்செட் ஆனால் இதை செய்வேன்.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!

    தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழும் கீர்த்தி சுரேஷ், தான் அப்செட் ஆக இருக்கும் நேரங்களில் நன்றாக சாப்பிடுவேன் என கூறியுள்ளார். மேலும் காரை எடுத்துக் கொண்டு தனியாக ஓட்டிச் செல்வேன் எனவும் கூறியுள்ளார்.

  • 19 Jul 2025 08:55 AM (IST)

    Parasakthi: ஜனநாயகன் படத்துடன் பராசக்தி மோதலா? – சுதா கொங்கரா விளக்கம்!

    நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் 2026, ஜனவரி 9ம் தேதி ரிலீசாகிறது. இதே நாளில் நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் வெளியாகும் என்ற தகவலுக்கு அப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா பதிலளித்துள்ளார். பராசக்தி ரிலீஸ் தேதியை தயாரிப்பு தரப்பு முடிவு செய்யும் என கூறியுள்ளார்.

  • 19 Jul 2025 08:35 AM (IST)

    Baashha Re-Release: பாட்ஷா படம் ரீ- ரிலீஸ்.. கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்!

    நடிகர் ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த “பாட்ஷா” படம் வெளியாகி 37 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். பலரும் படம் இன்றும் பார்க்கும் அளவுக்கு பிரெஷ்ஷாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

  • 19 Jul 2025 08:16 AM (IST)

    Bad Girl பட டீசரை நீக்க வேண்டும்.. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    Bad Girl பட டீசரை, சமூக ஊடகங்களில் இருந்து நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இது போன்ற ஆபாச காட்சிகள் பதிவேற்றம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

  • 19 Jul 2025 08:00 AM (IST)

    Once More: அர்ஜூன் தாஸ், அதிதி ஷங்கர் டூயட் பாடல் .. இன்று வெளியீடு

    அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “ஒன்ஸ் மோர்”. இந்த படத்தில் அர்ஜூன் தாஸ், அதிதி ஷங்கர் ஜோடியாக நடித்துள்ளனர். ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து வரும் இந்த படத்தில் இருந்து 3வது பாடல் இன்று (ஜூலை 19) மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 19 Jul 2025 01:05 AM (IST)

    Kuberaa OTT Release: ஓடிடியில் வெளியான குபேரா… ரசிகர்களிடம் கிடைத்த விமர்சனம்

    சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர்கள் நாகார்ஜூனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்த குபேரா படம் அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படம் கலவையான விமர்சனத்தை ஓடிடியில் பெற்றுள்ளதால் படக்குழு சற்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சினிமா என்பது பலரின் பொழுதுபோக்காக உள்ளது. உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை வெளியாகும் படங்களுக்கு என கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் . ஒவ்வொரு நாளும் திரை துறையில் பல்வேறு விதமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. வார இறுதியில் வெளியாகும் படங்கள் தொடங்கி ஓடிபி தளத்தில் ரிலீஸ் ஆகும் படங்கள், விரைவில் ரிலீஸ் ஆக உள்ள படங்கள், புதிதாக அறிவிக்கப்பட்ட படங்கள், புதிய படங்களின் ரிலீஸ் தேதி உள்ளிட்ட அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருக்கும். இதில் தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் அது தொடங்கிய காலகட்டத்தில் இருந்து தொழில்நுட்ப வளர்ச்சியால் மாறி உள்ள தற்போது காலகட்டம் வரை ஒவ்வொரு நாளும் புதுப்புது கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப வசதிகள், வியக்க வைக்கும் மாயாஜாலங்கள் ஆகியவை திரையின் வழியாக மக்களுக்கு காட்டப்படுகிறது. எழுத்து இயக்கம், கவிஞர் நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர் ஒளிப்பதிவாளர் கிராபிக்ஸ் டிசைனர் ஒலி வடிவமைப்பாளர், என ஏகப்பட்ட துறைகள் ஒரு படத்திற்காக உழைத்து அதனை மக்களிடம் சமர்ப்பிக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. தமிழ் சினிமா உலக நாடுகள் வரை பேசப்படும் அளவிற்கு படங்களை தயாரித்து வந்திருக்கிறது. இந்திய சினிமாவை எடுத்துக் கொண்டால் இந்தி சினிமாவிற்கு அடுத்ததாக அனைவரின் பார்வையும் தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய துறையாக விளங்கும் தமிழ் சினிமாவின் மீதுதான் இருக்கும். அனைத்து மொழி பிரபலங்களும் தமிழ் மொழியில் படங்களில் நடித்து தங்களது திறமைகளை நிரூபித்துள்ளனர். அதேபோல் தமிழ் சினிமாவைச் சார்ந்த பிரபலங்களும் மற்ற மொழிகளிலும் நடிக்க பெற்று பாராட்டுகளை குவித்துள்ளனர். இப்படி இந்திய சினிமா மொழிகளால் பிரிக்கப்பட்டு இருந்தாலும் வெளியில் இருந்து பார்க்கும்போது உலக சினிமாவுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு மகத்தான சாதனைகளை தன்னுள்ளே கொண்டிருக்கிறது என சொல்லலாம். அத்தகைய சினிமாவின் அப்டேட்டுகள் பற்றி காணலாம்.

சினிமா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் காண இங்கு கிளிக் செய்யவும்

Published On - Jul 19,2025 7:59 AM