எதிர் நீச்சல் – காக்கிச்சட்டை படங்கள் தனுஷ் சாருக்காக எழுதினேன்… இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் பேச்சு
Director RS Durai Senthilkumar Interview: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் துரை செந்தில்குமார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக லீடர் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அவர் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

துரை செந்தில்குமார்
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் துரை செந்தில்குமார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான எதிர்நீச்சல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து இருந்தார். துரை செந்தில்குமார் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான காக்கிச்சட்டை, கொடி, பட்டாஸ் மற்றும் கருடன் ஆகியப் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் லீடர். லெஜெண்ட் சரவணன் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ள நிலையில் படம் வருகின்ற 03-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு பிசியாக உள்ள நிலையில் இயக்குநர் துரை செந்தில்குமார் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நான் என் முதல் படம் செய்தபோது சிவகார்த்திகேயன் ஒரு நட்சத்திரம் இல்லை:
நான் என் முதல் படம் செய்தபோது சிவகார்த்திகேயன் ஒரு நட்சத்திரமாக இருக்கவில்லை. ‘மனம் கொத்திப் பறவை’ இன்னும் வெளியாகவில்லை. தனுஷ் சாருக்காக எதிர் நீச்சல் மற்றும் காக்கி சட்டை ஆகிய படங்களை எழுதினேன். எதிர் நீச்சல் படத்தில், கடைசி 20 நிமிடங்கள் கிட்டத்தட்ட மௌனமாகவே இருந்தன.
சிவாவின் வசன உச்சரிப்பு தனுஷ் சாருக்குப் பிடித்திருந்ததால், அவர் படத்தைத் தொடர்ந்தார். ஆனால், அந்த கடைசி 20 நிமிடங்களை மௌனத்திலேயே என்னால் கையாண்டிருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். காக்கி சட்டை படப்பிடிப்பின்போது, இப்படி ஒரு மாற்றம் உண்மையிலேயே தேவையா என்று சிவா கூட கேட்டார். மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட ஒன்றை அவர் மூலம் நாம் காட்ட வேண்டும் என்று அவரிடம் சொன்னேன் என்று இயக்குநர் துரை செந்தில்குமார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… அட்லி, லோகேஷ் படங்களுக்கு பிறகு அல்லு அர்ஜுன் யாருடன் கூட்டணி வைக்கிறார்? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் துரை செந்தில்குமார் பேச்சு:
#Sivakarthikeyan was not a star when I did my first film. Manam Kothi Paravai hasn’t been released yet. I wrote Ethir Neechal and Kaaki Sattai for #Dhanush sir. In Ethir Neechal, the last 20 minutes were almost silent.#Dhanush sir liked Siva’s dialogue delivery and went ahead… pic.twitter.com/aBS29YpdqE
— Laxmi Kanth (@iammoviebuff007) April 1, 2026
Also Read… Shaam: ஜன நாயகன் படத்தை இறுதி படமாக அறிவித்தது ஏன்? ஷாமிடம் விஜய் சொன்ன விஷயம்!