லோகா மலையாள சினிமாவில் எங்களுக்கு பெரிய பட்ஜெட் படம் – நடிகர் துல்கர் சல்மான்

Lokah Chapter 1: Chandra: மலையால சினிமாவில் வெளியாகி தற்போது மாஸ் வரவேற்பைப் பெற்று வரும் படம் லோகா சாப்டர் 1: சந்திரா. இந்தப் படத்தை நடிகர் துல்கர் சல்மான் அவரது தயரிப்பு நிறுவனமான வேஃபரர் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

லோகா மலையாள சினிமாவில் எங்களுக்கு பெரிய பட்ஜெட் படம் - நடிகர் துல்கர் சல்மான்

துல்கர் சல்மான்

Published: 

03 Sep 2025 22:58 PM

 IST

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் மம்முட்டியின் மகனாக சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள சினிமாவில் நடிகராக 2012-ம் ஆண்டு அறிமுகம் ஆகி தற்போது 13 ஆண்டுகளில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். நடிகர் துல்கர் சல்மான் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் தோல்வியை சந்திப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாக உள்ளது. மேலும் அவர் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விலகும் படங்கள் பெரும்பாலும் தோல்வியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக துல்கர் சல்மானுக்கு கதை தேர்வில் நல்ல ஞானம் உள்ளது என்று சினிமா வட்டாரங்களில் உள்ளவர்கள் கூறி வருகின்றனர்.

13 ஆண்டுகளாக சினிமாவில் நடிகராக மட்டும் இன்றி வேஃபரர் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார் துல்கர் சல்மான். இவர் நடிக்கும் படங்கள் மட்டும் இன்றி தயாரிக்கும் படங்களும் தொடர்ந்து வெற்றியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீபத்தில் இவரது வேஃபரர் நிறுவனத்தின் தயாரிப்பில் மலையாள சினிமாவில் வெளியான லோகா சாப்டர் 1: சந்திரா என்ற படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் தற்போது உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நாங்க ஒரு பைசாவ கூட வீணாக்க மாட்டோம்:

இந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மான் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது லோகா படத்தின் பட்ஜெட் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “எல்லோரும் லோகாவை ஒரு சிறிய பட்ஜெட் படம் என்று நினைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் மலையாளத்தில் லோகாவிற்கு நாங்கள் செலவிட்டது கிங் ஆஃப் கோதா, குரூப் போன்ற படங்களுக்கு செலவிட்ட தொகை தான். மலையாள சினிமாவில் எங்களுக்கு இது ஒரு பெரிய பட்ஜெட் படம். திரையில் எங்கு செலவழிக்கப்பட்டாலும் நாங்கள் ஒரு பைசா கூட வீணாக்கவில்லை என்று அவர் தெரிவித்து இருந்தார்.

Also Read… கவின் பட இயக்குநருடன் இணையும் விக்ரம்? வைரலாகும் தகவல் இதோ!

இணையத்தில் வைரலாகும் துல்கர் சல்மானின் பேச்சு:

Also Read… Venkat Prabhu : மங்காத்தா மாதிரி இருக்கணும்னு சூர்யா சொன்னாரு – வெங்கட் பிரபு பேச்சு!