Kaantha : துல்கர் சல்மானின் பிறந்தநாளில் வெளியாகும் ‘காந்தா’ பட டீசர்.. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு இதோ!
Kaantha Movie Teaser Release Update : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான். இவரின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் படம் காந்தா. இப்படம் வெளியீட்டிற்கு தயாராகிவரும் நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோ ரிலீஸ் குறித்த அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

காந்தா திரைப்படம்
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் (Selvamani Selvaraj) இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் காந்தா (Kanthaa). இந்த திரைப்படத்தில் முன்னணி நாயகனாக நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) நடித்துள்ளார். இந்த படமானது ரெட்ரோ காலத்துக் கதைக்களம் கொண்ட படமாக உருவாகியுள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் துல்கர் சல்மான். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மலையாள சினிமாவை விடவும் இவருக்குத் தெலுங்கு மொழியில் ரசிகர்கள் அதிகம் . இவரின் நடிப்பில் பான் இந்தியப் படமாக உருவாகிவருவதுதான் காந்தா. இந்த படத்தை நடிகர் ராணா (Rana Daggubati) தனது சுரேஷ் மூவிஸ் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக, நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri borse) நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகளிலிருந்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் ரீலிஸ் தேதியைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் டீசர் நாளை 2025, ஜூலை 28ம் தேதியில் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த டீசர் நாளை மதியம் 3 மணியளவில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இரண்டாவது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ்… வைரலாகும் புகைப்படங்கள்
காந்தா பட டீசர் ரிலீஸ் குறித்துப் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :
The road to release begins with the first tease at 3PM tomorrow.
Join us for the official (Tamil) teaser release of @kaanthamovie, produced by @SpiritMediaIN and @DQsWayfarerFilm
Roll. Camera. Action!#Kaantha #RanaDaggubati #SpiritMedia #DQsWayfarerfilms #SelvamaniSelvaraj… pic.twitter.com/q5SUOVxzCI— Spirit Media (@SpiritMediaIN) July 27, 2025
நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சென்சேஷனல் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். இவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரின் ஜோடி இப்படத்தில் வரவேற்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இவர்களுடன் நடிகர் சமுத்திரக்கனியும் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் 1950-களில் மெட்ராஸில் நடைபெற்ற சம்பவம் குறித்த கதைக்களத்துடன் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் ராணா டகுபதியும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ராஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’ – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!
காந்தா படத்தின் ரிலீஸ் எப்போது :
இந்த காந்தா திரைப்படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறுவடைந்ததாக கூறப்படும் நிலையில், நடிகர் துல்கர் சல்மான் அடுத்த படங்களில் பிசியாக இருந்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளார் சக்தி ஆர். செல்வா இசையமைத்து வருகிறார். இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நாளை 2025, ஜூலை 28ம் தேதியில் இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.