Kaantha : பனிமலரே.. வெளியானது ‘காந்தா’ திரைப்படத்தின் ஃபர்ட்ஸ் சிங்கிள்!

Kaantha Movie Panimalare Song : தென்னிந்திய சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் துல்கர் சல்மான். இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள படம் காந்தா. இந்த படத்திலிருந்து பனிமலரே என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Kaantha : பனிமலரே.. வெளியானது காந்தா திரைப்படத்தின் ஃபர்ட்ஸ் சிங்கிள்!

காந்தா படத்தின் முதல் பாடல்

Published: 

09 Aug 2025 18:05 PM

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்து வருபவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவரின் நடிப்பில் இதுவரை பல படங்கள் வெளியாகி மிகப் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி, பல கொடிகளை வசூல் செய்த படம் லக்கி பாஸ்கர் (Lucky Bhaskar). இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் வெளியான இப்படமானது, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தநிலையில், அடுத்ததாக துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் திரைப்படம் காந்தா (Kaantha). இயக்குநர் செல்வமணி செல்வராஜ் (Selvamani Selvaraj) இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை, நடிகர் ராணா டகுபதி (Rana Daggubati) தயாரித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக, கிங்டம் பட நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri borse) நடித்துள்ளார்.

இப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ளது. இப்படமானது விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஜானு சாந்தர் இசையமைப்பில் பனிமலரே என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த பாடலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : நான் அழுதுவிட்டேன்.. ‘மகாவதார் நரசிம்மா’ படத்தைப் பாராட்டிய ராகவா லாரன்ஸ்!

காந்தா படத்தின் முதல் பாடல் குறித்து துல்கர் சல்மான் வெளியிட்ட பதிவு :

இந்த காந்தா திரைப்படத்தை நடிகர் ராணா டகுபதியுடன் நடிகர் துல்கர் சல்மானும் இணைந்து தயாரித்துள்ளனர்.. இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படமாக உருவாகியிருக்கிறது. இந்த படமானது கடந்த 1960 ஆண்டு நடைபெற்ற சம்பவம் பற்றி உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் கதைக்களமானது நிஜ வாழ்க்கை நடிகருக்கும், இயக்குநருக்கும் இருக்கும் பிரச்சனை குறித்த கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார்.

இதையும் படிங்க : சிலம்பரசன் பட ஷூட்டிங் எப்போது? வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்!

மேலும் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிகர் ராணா டகுபதியும் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல் டீசர், துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. மேலும் இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 12ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் வெளியீட்டினுக்கு இன்னும் 1 மாதம் மட்டும் இருக்கும் நிலையில், படக்குழு படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளது. பனிமலரே என்ற இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.