அமேசான் ஓடிடியில் பதறவைக்கும் இந்த த்ரில்லர் படமான எல வீழா பூஞ்சிரா படத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

Ela Veezh Poonjira: கூலி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நன்கு கவனத்தை ஈர்த்தவர் நடிகர் சௌபின் ஷாகிர். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் இவர் ஹீரோ, வில்லன், காமெடியன் என எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார்.

அமேசான் ஓடிடியில் பதறவைக்கும் இந்த த்ரில்லர் படமான எல வீழா பூஞ்சிரா படத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

எல வீழா பூஞ்சிரா

Updated On: 

20 Sep 2025 19:33 PM

 IST

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சௌபின் ஷாகிர் (Actor Soubin Shahir). நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்ற வழக்கம் மலையாள சினிமாவில் இல்லை. அதன்படி மலையாள சினிமாவில் இருக்கும் நடிகர்கள் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அவர்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றுதான் யோசிபார்கள். அப்படி மலையாள சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் இருந்து அடுத்தக்கட்டத்தில் இருக்கும் நடிகர்கள் வரை அனைவரும் இப்படி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் இந்திய சினிமாவில் மலையாள சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் கூலி படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழக ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றவர் நடிகர் சௌபின் ஷாகிர்.

இவரது நடிப்பில் கடந்த 15-ம் தேதி ஜூலை மாதம் 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியனா படம் எல வீழா பூஞ்சிரா. இந்தப் படத்தை இயக்குநர் ஷாகின் கபீர் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் சௌபின் ஷாகிர் உடன் இணைந்து நடிகர்கள் சுதி கொப்பா, ஜூட் ஆண்டனி ஜோசப், ஜித்து அஷ்ரஃப், வின்சென்ட் வடக்கன், கிரீஷ் மோகன், ஜினீஷ் சந்திரன், ராஜேஷ் குமார் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கதாஸ் அண்டோல்ட் சார்பாக தயாரிப்பாளர் விஷ்ணு வேணு இந்தப் படத்தை தயாரித்து உள்ளார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

எல வீழா பூஞ்சிரா படத்தின் கதை என்ன?

ஒரு மலைப்பகுதியில் நடிகர் சௌபின் ஷாகிர் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிவருகிறார். இவரது மனைவி தனியாக வசித்துவரும் நிலையில் அவருக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விசயம் சௌபின் ஷாகிருக்கு தெரியவர அவரது மனைவி தற்கொலை செய்துகொள்கிறார். இந்த நிலையில் நடிகர் சௌபின் ஷாகிர் அவரது மனைவியுடன் தொடர்பில் இருந்த நபரை எப்படி பழி வாங்கினார் என்பது தான் படத்தின் கதை. மிகவும் பதபதவைக்கும் காட்சிகளுடன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… தயாரிப்பாளர்களாக லோகா படத்தால் பணத்தை இழப்போம் என்று நினைத்தோம் – துல்கர் சல்மான் சொன்ன விசயம்

நடிகர் சௌபின் ஷாகிரின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… கமல் சார் கூட நடிக்கும் போது அந்த சீன்ல பயந்து அழுதுட்டேன் – நடிகை மீனா சொன்ன சுவாரஸ்ய சம்பவம்