ஜோதிகா மற்றும் கார்த்தி இல்லாமல் சூர்யா இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணும் அந்த ஒரே ஒரு தமிழ் நடிகர்… யார் தெரியுமா?
Actor Suriya Instagram: நடிகர் சூர்யா தற்போது கோலிவுட் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்தியா அளவில் தனது ரசிகர்களின் பட்டாளத்தை வளர்த்துள்ளா. சாதாரண மக்கள் மட்டும் இன்றி பிரபலங்கள் பலரும் தாங்கள் சூர்யாவின் ரசிகர்கள் என்று வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர்.

சூர்யா
கோலிவுட் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வரும் சூர்யா (Actor Suriya)அவ்வப்போது மற்ற மொழிப் படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவிற்கு தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம் என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் சூர்யாவின் படங்களுக்கு எவ்வளவு வரவேற்பு உள்ளதோ அதே போல மலையாளத்திலும் தெலுங்கிலும் டப் செய்து வெளியிடப்படும் சூர்யாவின் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண மக்கள் மட்டும் இன்றி மற்ற மொழி திரையுலக நடிகர்களுக்கும் சூர்யா தான் பிடித்த நடிகராக இருக்கிறார். இதனை பலரும் வெளிப்படையாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர்களை ரசிகர்கள் அவர்களது சமூக வலைதளப் பக்கங்களில் ஃபாலோ செய்வது இயல்பான ஒன்றாக உள்ளது. உச்ச நடிகர் நடிகையாக இருந்தால் அவர்களுக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோவர்ஸ் இருப்பது இயல்பு. அந்த வகையில் நடிகர் சூர்யாவிற்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 9.8 மில்லியன் ஃபாலோவர்கள் இருக்கிறார்.
நடிகர் சூர்யா இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணும் அந்த ஒரு நடிகர்:
மேலும் நடிகர் சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு 7 மற்ற இன்ஸ்டா ஐடிகளை ஃபாலோ செய்து வருகிறார். இதில் நடிகர்கள் என்று பார்த்தால் ஜோதிகா மற்றும் கார்த்தி நிச்சயமாக இருக்கிறார்கள். அவர்கள் சூர்யாவின் குடும்பத்தினர். இவர்கள் இல்லாமல் நடிகர் சூர்யா தமிழ் நடிகர் ஒரே ஒருவரை மட்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நடிகர் மாதவனை மட்டும் ஃபாலோ செய்து வருகிறார். இதன் மூலமாகவே இவர்கள் இருவரும் சினிமாவை தாண்டி எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
Also Read… ஜேசன் சஞ்சய் இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணும் ஒரே ஒரு தமிழ் நடிகர்… ஆனால் அது விஜய் இல்லை!
சூர்யாவின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவிங்
மாதவன் நடிகை ஜோதிகா உடன் பலப் படங்களில் இணைந்து நடித்து இருந்தாலும் சூர்யா மற்றும் மாதவன் இருவரும் இணைந்து நடித்தப் படம் ஆயுத எழுத்து. இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சூர்யாவின் சமீபத்திய இன்ஸ்டா பதிவு:
Also Read… படத்திற்காக புது விசயத்தைக் கற்றுக்கொண்ட நடிகை மிருணாள் தாக்கூர் – வைரலாகும் இன்ஸ்டா பதிவு!