தமிழில் மட்டும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

What To Whatch: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் படங்கள் வரிசைக்கட்டி வெளியாகி வருகின்றது. திரையரங்குகளில் மட்டும் இன்றி வாரம் வாரம் ஓடிடியிலும் புதுப் படங்கள் வெளியாகி வரும் நிலையில் ரசிகர்கள் அதனைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் என்னென்ன படங்கள் ஓடிடியில் வெளியாகிறது என்பதைப் பார்க்கலாம்.

தமிழில் மட்டும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

படங்கள்

Published: 

11 Jan 2026 18:04 PM

 IST

மாஸ்க்: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் கவின். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றதுல் அந்த வகையில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு படங்கள் நடிகர் கவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி இறுதியாக நடிகர் கவின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் மாஸ்க். கடந்த 21-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. டாக் காமெடி பாணியில் வெளியான இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது போல தற்போது ஓடிடியிலும் வெளியாகி உள்ளது. அதன்படி மாஸ்க் படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் வெளியாகி உள்ளது.

அங்கம்மாள்: இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் எழுதி இயக்கி கடந்த 5-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் அங்கம்மாள். இந்தப் படத்தில் நடிகை கீதா கைலாசம் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வரும் நிலையில் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்தப் படம் தற்போது சன் நெக்ஸ்ட் மற்றும் சிம்பிளி சௌத் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது.

Also Read… பிக்பாஸில் இவங்க தான் டாப் 4 ஃபைனலிஸ்ட் இவர்களதான்… இன்று வெளியேறும் நபர் இவர் தானா?

யெல்லோ: சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தவர் பூர்ணிமா. இவர் கடந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு தமிழக மக்களிடையே அதிக அளவில் பிரபலம் ஆனார். இதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகை பூர்ணிமா நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் 21-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் யெல்லோ. இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில் தற்போது ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

மகாசேனா: தமிழ் சினிமாவில் மிகவும் கலகலப்பான படங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றவர் நடிகர் விமர். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் விமல் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மகாசேனா. இந்தப் படம் தற்போது ஆஹா என்ற ஓடிடியில் வருகின்ற 13-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Parasakthi: பராசக்தி படத்தின் வெளிநாட்டு டிக்கெட் புக்கிங் கேன்சல்.. தள்ளிபோகிறதா ரிலீஸ் தேதி?

புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..
எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!
ஜனவரி 12ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் PSLV C62.. சிறப்புகள் என்ன?
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!