சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வில்லனாக கலக்கிய படங்களின் லிஸ்ட் இதோ!

50 Years Of Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் அவர் நடிகராக அறிமுகம் ஆன போது வில்லனாக பலப் படங்களில் தொடர்ந்து நடித்தார். அதில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இரண்டு படங்களைப் பார்ப்போம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வில்லனாக கலக்கிய படங்களின் லிஸ்ட் இதோ!

16 வயதினிலே படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன்

Published: 

12 Aug 2025 17:15 PM

நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) சினிமாவில் அறிமுகம் ஆகி 50 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்த நிலையில் தற்போது உள்ள பலரும் அறியாத விசயம் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கவில்லை. அதன்படி அவர் அறிமுகம் ஆன படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து சிலப் படங்களில் வில்லனாக நடித்து வந்தார். சுமார் 30 படங்களுக்கு மேல் நடித்தப் பிறகே நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. வில்லனாக நடிகர் ரஜினிகாந்த் பலப் படங்களில் நடித்து இருந்தாலும் இன்றும் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் படங்களாக இருப்பது 1976-ம் ஆண்டு வெளியான மூன்று முடிச்சு மற்றும் 1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே ஆகிய இரண்டு படங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்த் வில்லனாக அசத்திய மூன்று முடிச்சு:

இயக்குநர் கே. பாலசந்தர் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் 22-ம் தேதி 1976-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மூன்று முடிச்சு. இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் நாயகியாக நடிகை ஸ்ரீ தேவி நடித்து இருந்தார். இவர் நாயகியாக நடித்த முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் வில்லனாக இந்தப் படத்தில் அசத்தி இருப்பார்.

ஓ சீதா கதா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்காக இந்தப் படம் வெளியாகி இருந்தது. மேலும் இந்தப் படத்தை ஆர்.எம்.எஸ் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஆர். வெங்கடராமன் தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பரட்டையாக 16 வயதினிலே படத்தில் கலக்கிய நடிகர் ரஜினிகாந்த்:

இயக்குநர் பாரதி ராஜா எழுதி இயக்கி உள்ள படம் 16 வயதினிலே. இந்தப் படத்தின் மூலம் தான் இயக்குநர் பாரதி ராஜா இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் சப்பானி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

நடிகை ஸ்ரீதேவி மயில் என்ற கதாப்பாத்திரத்திலும் நடிகர் ரஜினிகாந்த் பரட்டை என்ற கதாப்பாத்திரத்திலும் கலக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த 15-ம் தேதி செப்டம்பர் மாதம் 1977-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் நாயகன் நாயகியை விட வில்லன் பரட்டை கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் ரஜினிகாந்தின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனது குறிப்பிடத்தக்கது.

Also Read… 65 ஆண்டுகளை நிறைவு செய்தது களத்தூர் கண்ணம்மா – கமல்ஹாசனுக்காக சிறப்பு வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

நடிகர் ரஜினிகாந்தின் சமீபத்திய எக்ஸ் தள பதிவு:

Also Read… கல கல காமெடிக்கும் பஞ்சம் இல்லாத ப்ரோ டாடி படம்… ஹார்ஸ்டாரில் மிஸ்செய்யாமல் பாருங்க!