தனுஷ் சாருக்கு மிகவும் சவாலான கதாப்பாத்திரம் அதுதான் என்றார் – இயக்குநர் விக்னேஷ் ராஜா ஓபன் டாக்

Director Vignesh Raja Interview: தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் திரையரங்குகளில் அடுத்தாக வெளியாக உள்ள படம் கர. இந்தப் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படக்குழு தொடர்ந்து பேட்டிகளை அளித்து வருகின்றனர்.

தனுஷ் சாருக்கு மிகவும் சவாலான கதாப்பாத்திரம் அதுதான் என்றார் - இயக்குநர் விக்னேஷ் ராஜா ஓபன் டாக்

தனுஷ்

Published: 

24 Apr 2026 12:12 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் இடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் படங்களில் நடிப்பது மட்டும் இன்றி பாடல்கள் எழுதுவது, படங்களை தயாரிப்பது, பாடல்கள் பாடுவது, படங்களை இயக்குவது என்று பல வேலைகளை செய்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் கர. இந்தப் படம் வருகின்ற 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படக்குழு போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றது.

அந்த வகையில் படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா தொடர்ந்து பேட்டிகளை அளித்து வருகிறார். அதில் நடிகர் தனுஷ் உடன் மற்றும் படத்தில் நடித்த மற்ற நடிகர்களுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். இதில் தனுஷ் மிகவும் சவாலாக இருந்த கதாப்பாத்திரம் என்று ஒன்றை கூறியுள்ளார். அது குறித்து இயக்குநர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

தனுஷ் சாருக்கு மிகவும் சவாலான கதாப்பாத்திரம் அதுதான் என்றார்:

அந்தப் பேட்டியில் விக்னேஷ் ராஜா பேசியதாவது, நான் தனுஷ் சாரிடம், “நீங்கள் எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறீர்கள். அவற்றில் மிகவும் சவாலானதாக நீங்கள் உணர்ந்த கதாபாத்திரம் எது?” என்று கேட்டேன். அதற்கு அவர், மாரி என்று பதிலளித்தார். ஏனெனில், சிகரெட் கொண்டு குழந்தைகளின் பலூன்களை உடைக்கும் ஒரு நபராக நடித்தாலும், அதே சமயம் மக்களால் விரும்பப்படக்கூடியவராகவும் அவர் அந்தக் கதாபாத்திரத்தில் தோன்ற வேண்டியிருந்தது என்று தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… குடிமக்கள் தற்போது குடிகார மக்கள்.. ஓட்டு போட வந்து கொந்தளித்த சிவக்குமார்

இணையத்தில் வைரலாகும் விக்னேஷ் ராஜா பேச்சு:

Also Read… No Need என்று சொன்னாரா அஜித்? என்ன நடந்தது – முழு விவரம் இதோ!

Follow Us
சீனாவிலிருந்து ஈரானுக்கு சென்ற கப்பல் பறிமுதல்: ஏவுகணை இரசாயனங்கள் குறித்த அதிர்ச்சி குற்றச்சாட்டு!
படத்தை மிஞ்சும் நிஜ சம்பவம்.. நோயாளிக்கு சிகிச்சை அளித்த பாதுகாப்பு காவலர்..
ஹைதராபாத் குறித்து பெண் பகிர்ந்த அனுபவம்.. இணையத்தில் வைரல்.
ஹைதராபாதில் வினோத சம்பவம்.. காக்கை விலைக்கு வாங்கிய நிகழ்வு..