Vetrimaaran: வெறுப்பையோ வன்முறையையோ பணமாக்க விரும்பாத படம் நீளிரா.. துரந்தர் படத்தை தாக்கி பேசிய வெற்றிமாறன்!

Vetrimaaran Controversial Speech: தென்னிந்திய சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் வெற்றிமாறன். இவர் சமீபத்தில் நீளிரா படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த நிலையில், பிரபல பாலிவுட் படத்தை தாக்கி பேசியதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. அதுகுறித்து விவரமாக பார்க்கலாம்.

Vetrimaaran: வெறுப்பையோ வன்முறையையோ பணமாக்க விரும்பாத படம் நீளிரா.. துரந்தர் படத்தை தாக்கி பேசிய வெற்றிமாறன்!

வெற்றிமாறன்

Updated On: 

28 Mar 2026 19:31 PM

 IST

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் இயக்குநராக இருந்துவருபவர் வெற்றிமாறன் (Vetrimaaran). இவரின் இயக்கத்தில் குறைவான படங்கள் வெளியாகியிருந்தாலும், அத்தனையும் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த விதத்தில் இவர் நடிகர் தனுஷை (Dhanush) வைத்தே கிட்டத்தட்ட 4-க்கு படங்களுக்கும் மேல் பணியாற்றியுள்ளார். அந்த விதத்தில் இவரின் இயக்கத்தில் புதிதாக உருவாகிவரும் படம்தான் அரசன் (Arasan). இந்த படத்தில் முன்னணி நாயகனாக நடிகர் சிலம்பரசன் (Silambarasan) நடித்திருக்கும் நிலையில், அவருடன் வட சென்னை படத்தில் நடித்த இணைந்து நடித்துவருகின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் முடிந்த நிலையில், அடுத்தகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பான நடைபெற்றுவருகிறது.

அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் (Karthik Subburaj) தயாரிப்பில் உருவாகியுள்ள நீளிரா பட ப்ரீ- ரிலீஸ் (Neelira) நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, பிரபல பாலிவுட் படம் ஒன்றை தாக்கி பேசியதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அந்த சூப்பர் ஹிட் படத்தில் நடிக்காமல் மிஸ் செய்துவிட்டேன் – அப்பாஸ் ஓபன் டாக்

நீளிரா படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சியின்போது இயக்குனர் வெற்றிமாறன் பேசிய விஷயம்:

அந்த நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேசுகையில், “இன்று எல்லாமே பிரச்சாரமாகிவிடுகிறது. ஒரு பிரச்சாரத்திற்கு நினைவுகளைத் தூண்டும் சக்தி உண்டு. பணமதிப்பிழபின் போது யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டார்கள், வரிசையில் நின்றதால் எத்தனை உயிர்கள் பறிபோயின என்பது நம் அனைவருக்கும் தெரியும். நீளிரா ஒரு பிரச்சார திரைப்படம் இல்லை. கொள்கைகளை தூக்கிப்பிடிப்பதற்காக செலவு செய்து எடுக்கப்பட்ட படமும் இல்லை. பல கோடிகளுக்கு ஆசைப்பட்டு, வெறுப்பையோ வன்முறையையோ பணமாக்க விரும்பாத படம்” என அதில் தெரிவித்துள்ளர்.

இதையும் படிங்க: கர படத்திற்காக தனுஷ் சார் சொன்ன விஷயம்.. நான் பிரம்மித்துபோனேன்- இயக்குநர் விக்னேஷ் ராஜா!

அந்த விதத்தில் இவர் பிரபல பாலிவுட் திரைப்படத்தை தாக்கி பேசியதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அது வேறுயெந்த படமும் இல்லை, ரன்வீர் சிங்கிங் துரந்தர் 2 படம் என கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

நீளிரா பட நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேசிய வீடியோ பதிவு:

இயக்குநர் வெற்றிமாறன் தற்போது அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்துவருகிறார். இதன் ஷூட்டிங் தற்போது சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. அதை தொடர்ந்து, இப்படத்தின் ஷூட்டிங்கை வரும் 2026 மே மாதத்திற்கு முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் விரைவில் இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..