சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் நடித்தது இப்படிதான் – இயக்குநர் வாசு ஓபன் டாக்!

Director P Vasu talks about Rajinikanth in Chandramukhi movie: தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் பி வாசு. இவர் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் நடித்தது இப்படிதான் - இயக்குநர் வாசு ஓபன் டாக்!

சந்திரமுகி

Published: 

07 Mar 2026 16:52 PM

 IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் பி வாசு. இவர் தமிழ் சினிமாவில் கடந்த 1981-ம் ஆண்டு வெளியான பன்னீர் புஷ்பங்கள் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் பி வாசு. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார். தொடர்ந்து பி வாசு இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்குநர் பி வாசு இயக்கிய பணக்காரன், பொன்மனச் செல்வன், நடிகன், சின்ன தம்பி, மன்னன், ரிக்‌ஷா மாமா, வாட்டர் வெற்றிவேல் என பலப் படங்கள் இவரது இயக்கத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பி வாசு இயக்கத்தில் கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வெளியான படம் சந்திரமுகி. இந்தப் படம் கன்னட சினிமாவில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஆப்தமித்ரா என்றப் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி சந்திரமுகி படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருந்தார். இவருடன் இணைந்து இந்தப் படத்தில் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படம் எப்படி உருவானது மற்றும் அதில் ரஜினிகாந்த் கதாப்பாத்திரம் குறித்து இயக்குநர் பி வாசு பேசியது வைரலாகி வருகின்றது.

சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் நடித்தது இப்படிதான்:

அதன்படி அந்தப் பேட்டியில் இயக்குநர் பி வாசு கூறியதாவது, ரஜினிகாந்த் பெங்களூருவில் இருந்த போது சௌந்தர்யாவின்ஆப்தமித்ரா என்ற கன்னட மொழி படத்தை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவர் மிகவும் வயதானவர் போல வேடமனிந்து ஆட்டோவில் அடையாளமே தெரியாமல் சென்றுள்ளார். ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தபோது பலான படம் எங்கு ஓடும் என்று ட்ரைவரிடம் கேட்டுள்ளார். அதற்கு ட்ரைவர் இந்த வயசுல உனக்கு என்ன அந்தப் படம் கேக்குது என்று திட்டிவிட்டு சௌந்தர்யவின் ஆப்தமித்ரா படத்தைப் பற்றி கூறியுள்ளார்.

மேலும் சௌந்தர்யாவின் நடிப்பையும் அந்த ஆட்டோ ட்ரைவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். அதன் பிறகு அந்தப் படத்தை தியேட்டரில் சென்று பார்த்த ரஜினிகாந்த் மக்களின் வரவேற்பைப் பார்த்த பிறகுதான் தமிழில் அந்தப் படத்தை செய்ய வேண்டும் என்று கூறியதாக இயக்குநர் பி வாசு தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… எதிர்நீச்சல் 2 சீரியலில் வில்லனாக மிரட்டும் வேல ராம மூர்த்தியின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் பி வாசு பேச்சு:

Also Read… Sai Abhyankkar: நமது கலாச்சாரத்தை பேசும்.. கருப்பு படம் ஏப்ரல் ரிலீஸ் – சாய் அபயங்கர் உறுதி!

Follow Us
Related Stories
Texla Movie: ஜெய் – சுராஜ் வெஞ்சாரமூடு நடிக்கும் டெக்ஸ்லா.. வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!
ஃபேமிலி செண்டிமெண்ட் படம் பார்க்கணுமா? நடிகர்கள் பிஜூ மேனன் – மஞ்சு வாரியர் நடிப்பில் இந்த லலிதம் சுந்தரம் படத்தை மிஸ் செய்யாதீர்கள்
Meenakshi Chaudhary: எனது வருங்கால கணவருக்கு அந்த விஷயங்கள் கட்டாயம் இருக்கவேண்டும் – மீனாட்சி சவுத்ரி போட்ட கண்டீஷன்!
தனது பிஸ்னஸில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய யாரடி நீ மோகினி சீரியல் நடிகை – குவியும் வாழ்த்து!
இந்திய சினிமாவின் எவர்கிரீன் ஐகான் விருதை வென்ற சிம்ரன் – வைரலாகும் நெகிழ்ச்சிப் பதிவு!
Priyanka Mohan: மேட் இன் கொரியா பட ஷூட்டிங் சிக்கல்கள் – மனம் திறந்த பிரியங்கா மோகன்!
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி