எனக்கு ஏதோ காதல் கதை வச்சுருக்கீங்களாமே… சுதா கொங்கராவிடம் கலகப்பாக பேசிய ரஜினிகாந்த்!
Director Sudha Kongara: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சுதா கொங்கரா. இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பராசக்தி படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன சொன்னார் என்பது குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சுதா கொங்கரா - ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் கடந்த 10-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பராசக்தி. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து கலவையான விமர்சனம் கிடைத்து வருகிறது. மேலும் இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூபாய் 50 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்த பராசக்தி படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 25-வது படம் என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகரக்ளின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த ஜன நாயகன் படம் ஒத்திவைக்கப்பட்ட பிறகு இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் பெரும்பாலான பிரபலங்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டி வருகின்றனர். மேலும் இந்தப் படத்தினை முன்னதாக நடிகர் கமல் ஹாசன் பாராட்டிய நிலையில் ரஜினிகாந்தும் பாராட்டியுள்ளார். தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கராவிடம் தொலைபேசி மூலம் பாராட்டியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சுதா கொங்கராவிடம் கலகப்பாக பேசிய ரஜினிகாந்த்:
அந்தப் பேட்டியில் சுதா கொங்கரா பேசியதாவது, ‘பராசக்தி’ படத்தைப் பார்த்த பிறகு, ரஜினிகாந்த் சார் அதிகாலையிலேயே எனக்கு போன் செய்து, இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்ததற்காகப் பாராட்டினார். மேலும், நான் அவருக்காக வைத்திருக்கும் காதல் கதையைப் பற்றியும் கேட்டார். நான் தொலைபேசியில் பேசியதால், அந்தக் கதையை அவரிடம் விவரிக்கவில்லை என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் சுதா கொங்கராவின் பேச்சு:
“After watching #Parasakthi, #Rajinikanth sir called me early in the morning and appreciated for touching this subject💥. Also he asked about love story that I have for him😁♥️. I didn’t narrate it, because I spoke in phone📲”
– #SudhaKongara pic.twitter.com/XcKzgDi1Mf— AmuthaBharathi (@CinemaWithAB) January 20, 2026
Also Read… அஜந்தா – எல்லோரா சர்வதேச திரைப்பட விழா.. பத்மபாணி விருது பெறும் இளையராஜா