Nalan Kumarasamy: ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு நலன் படமாக இருக்காது – வா வாத்தியார் படம் குறித்து இயக்குநர் நலன் குமாரசாமி!
Nalan Kumarasamy About Vaa Vaathiyaar Movie: தமிழில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர்தான் நலன் குமாரசாமி. இவரின் இயக்கத்தில் தமிழில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் வா வாத்தியார். இப்படமானது விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இந்த படம் குறித்து இயக்குநர் நலன் குமாரசாமி மனம் திறந்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

கார்த்தி மற்றும் நலன் குமாரசாமி
நடிகர் கார்த்தியின் (Karthi) நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் படம்தான் வா வாத்தியார் (Vaa Vaathiyaar). இந்த படம் கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே வெளியாகவிருந்த நிலையில், சில பிரச்சனைகளின் காரணமாக வெளியீட்டு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த விதத்தில் தற்போது இப்படம் 2026ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மீண்டும், தொடங்கியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி இயக்க, கார்த்தி மற்றும் க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty) இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் கரடி போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகியுள்ளதாம்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருந்த இயக்குநர் நலன் குமாரசாமி (Nalan Kumarasamy), வா வாத்தியார் படம் குறித்து தனது ரசிகர்களுக்கு ஷாக் தகவல் ஒன்றை கூறியுள்ளார். அது என்னவென்றால், இப்படம் தனது “ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு நலன் படமாக இருக்காது” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழில் மட்டும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?
வா வாத்தியார் படம் குறித்து இயக்குநர் நலன் குமாரசாமி கூறிய விஷயம் :
அந்த நேர்காணலில் பேசிய இயக்குநர் நலன் குமாரசாமி, அதில் “இந்த வா வாத்தியார் படமானது நலன் பட என எண்ணி ரசிகர்கள் பார்க்கக்கூடிய படமாக இது இருக்காது. நான் அவர்களை அதிகம் ஏமாற்ற மாட்டேன், ஆனால் நான் இப்படத்திற்காக ரொப்மவே கஷ்டப்பட்டுருக்கேன். இது உண்மையில் எதிர் தரப்பு ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்டப் படம்” என அதில் விவரமாக தெரிவித்துள்ளார் . இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது… 8 ஆண்டுகளைக் கடந்தது சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம்
வா வாத்தியார் படக்குழு வெளியிட்ட புது போஸ்டர் பதிவு :
When belief meets bravery, legends are reborn ✊ 💥 #VaaVaathiyaar From January 14 🥳#VaaVaathiyaarPongal ✨ pic.twitter.com/3WYew1ZtUx
— Studio Green (@StudioGreen2) January 12, 2026
இந்த் வா வாத்தியார் படத்தின் ட்ரெய்லர் மற்றும் படத்தின் பாடல்கள் அனைத்தும் கடந்தஹ் 2025ம் ஆண்டு டிசம்பர் தொடக்கத்திலே வெளியாகியிருந்தது. இதில் கார்த்தியுடன் நடிகர்களாக, க்ரித்தி ஷெட்டி, ராஜ் கிரண், சத்யராஜ், கருணாகரன் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டிற்கு சில தினங்களே உள்ள நிலையில், இப்படம் எதிர்பாராத வெற்றியை பெரும் என கூறப்படுகிறது.