Sasikumar : தமிழில் அதிக இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர் சசிகுமார்தான் – இயக்குநர் முத்தையா பேச்சு!

Director Muthaiah Praises Sasikumar : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் இயக்குநர் முத்தையா. இவர் கார்த்தி முதல் சசிகுமார் வரை பல பிரபலங்களை வைத்து படங்களை இயக்கியிருக்கிறார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய இவர் சசிகுமார் குறித்து பேசியுள்ளார்.

Sasikumar : தமிழில் அதிக இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர் சசிகுமார்தான் - இயக்குநர் முத்தையா பேச்சு!

சசிகுமார் மற்றும் முத்தையா

Published: 

19 Aug 2025 17:04 PM

கோலிவுட் சினிமாவில் கிராமத்துக் கதைக்களம் கொண்ட படங்களை இயக்கி மக்களிடையே பிரபலமானவர் இயக்குநர் முத்தையா (Muthaiah). இவரின் இயக்கத்தில் கார்த்தி (Karthi) முதல் சசிகுமார் (Sasikumar) வரை பல்வேறு பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இவரின் முதல் திரைப்படமாக அமைந்தது குட்டிப்புலி (Kutti Puli). கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் மூலம், இயக்குநர் முத்தையா தமிழில் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் சசிகுமார் முன்னணி கதாநாயகனாக நடிக்க, அவருடன் நடிகை லட்சுமி மேனன் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து இவர் கார்த்தி, ஆர்யா, மற்றும் விஷால் என பல்வேறு பிரபலங்களை வைத்து படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம், காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம். இதில் நடிகர் ஆர்யா நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய முத்தையா, நடிகர் சசிகுமாரை புகழ்ந்துள்ளார். மேலும் சசிகுமாரால் இதுவரை சுமார் 11 இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளதாக அவர் கூறியிருக்கிறார். மேலும் அவர் பேசியது குறித்துத் தெளிவாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க : ராஷ்மிகா மந்தனாவின் ‘தமா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இதோ!

சசிகுமார் குறித்து இயக்குனர் முத்தையா பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் இயக்குநர் முத்தையா சினிமா குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சசிகுமார் குறித்து பேசியுள்ளார். அவர் அதில், என்னை முதலில் நம்பியவர் சசிகுமார்தான். அவரிடம் நான் முதலில் குட்டிப்புலி படத்தின் கதையை கூறினேன். அதில் சிலருக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், ” சினிமா என்பது நடிப்புதான். முத்தையாவிற்கு அதைச் சொல்ல வருகிறது “என சசிகுமார் என்னிடம் சொன்னார். எனது வாழ்க்கையில் என் அப்பா மற்றும் அம்மாவிற்குப் பின், என்னை முழுவதுமாக நம்பியவர் சசிகுமார்தான்.

சமீபத்தில் சசிகுமார் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :

என்னிடம் அவர் பேசும்போது, சினிமாவில் நான் தனிப்பட்ட சாதனையாக நினைப்பது, 10 இயக்குநர்களையாவது சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்றார். ஆனால் அவர் நடிப்பில், இதுவரை சுமார் 11 இயக்குநர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவிற்கு நிறைய சசிகுமார்கள் தேவை” என்றும் இயக்குநர் முத்தையா ஓபனாக பேசியிருந்தார். தற்போது இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : இணைந்து நடிக்கும் ரஜினிகாந்த் – கமல்ஹாசன்? இயக்கப்போகும் மாஸ் இயக்குநர்.. புது தகவலால் அதிரும் கோலிவுட்!

கொடிவீரன் திரைப்படம் :

இயக்குநர் முத்தையா குட்டிப்புலி திரைப்படத்தை அடுத்து மீண்டும் சசிகுமாருடன் இணைந்து கொடிவீரன் படத்தை உருவாக்கினார். இப்படத்தில் சசிகுமார், மகிமா நம்பியார் என பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.