மங்காத்தா படத்தால்தான் இப்படி ஆகிடுச்சு… எக்ஸ் தளத்தில் புலம்பும் மோகன் ஜி

Director Mohan G: தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய கதைகளை படமாக இயக்கி மக்களிடையே கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் மோகன் ஜி. இந்த நிலையில் தற்போது இவரது இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் திரௌபதி 2. இந்த நிலையில் இயக்குநர் மோகன் ஜி வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மங்காத்தா படத்தால்தான் இப்படி ஆகிடுச்சு... எக்ஸ் தளத்தில் புலம்பும் மோகன் ஜி

மோகன் ஜி

Published: 

24 Jan 2026 21:56 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மோகன் ஜி. இவரது இயக்கத்தில் இதுவரை 5 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன்படி இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான படங்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான 5 படங்களில் மூன்று படங்களில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி தான் நாயகனாக நடித்து உள்ளார். இவர் நடிகர் அஜித் குமாரின் மச்சான் ஆவார். அதாவது நடிகை ஷாலினி அஜித் குமாரின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர் ரிஷி நடிப்பில் நேற்று திரையரங்குகளில் திரௌபதி 2 படம் வெளியானது. அதே நேரத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் முன்னதாக சூப்பர் ஹிட் அடித்த மங்காத்தா படமும் நேற்று ஜனவரி மாதம் 23-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக திரௌபதி 2 படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தளபதி விஜயின் ஜன நாயகன் வெளியாகும் என்று படத்தின் வெளியீடு 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் தற்போது மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆனதால் திரௌபதி படம் பாதிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திரௌபதி படம் குறித்து எக்ஸ் தளத்தில் புலம்பும் மோகன் ஜி:

அதன்படி இயக்குநர் மோகன் ஜி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது, திரெளபதி 2 திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும், மங்காத்தா திரைப்பட வெளியீட்டால் அதற்கு முன் நிற்க முடியவில்லை.. பொங்கல் அன்று திரையரங்க பற்றாக்குறையால், வராமல் அடுத்த வாரம் தள்ளி வந்தது மிகப்பெரிய தவறு.. மக்களிடம் திரைப்படம் ஜனவரி 23 வெளியாகிறது என்ற செய்தியை கொண்டு சேர்க்க முடியவில்லை.. மங்காத்தா திரைப்பட கூட்டத்தால், எங்கள் திரைப்படத்தின் ஆடியன்ஸ் கருத்து பதிவு செய்ய முடியவில்லை.. மக்களிடம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டு சேர்க்க முடியவில்லை.. இந்த சூழலை பயன்படுத்தி, பலர் என் மீது தப்பான கருத்தை பதிவு செய்தும், படம் பார்க்காமல் தவறான கருத்துக்களையும் பரப்பி வருகிறார்கள்.. திரைப்பட துறையில் எந்த பலமும் இல்லாமல் தனியாக இந்த 10 வருடங்களை கடந்து வந்துள்ளேன்.. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. எனக்கு மக்களே துணை.. மக்களே முடிவு செய்யட்டும்.. என்றும் உங்களை மட்டுமே நம்பி இருக்கும் உங்கள் மோகன் G என்று தெரிவித்துள்ளார்.

Also Read… Mankatha: ரீ-ரிலீஸில் வரலாறு படைக்கும் அஜித் குமாரின் மங்காத்தா.. திரையரங்குகளில் டிக்கெட் புக்கிங்கில் சாதனை!

இயக்குநர் மோகன் ஜி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இந்த போட்டோவில் இருக்கும் சிறுமி யாருனு தெரியுமா? இவர் இன்னும் டாப் நடிகைதான்!

இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
சட்டப்படி வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
விருது விழாவில் கவனம் ஈர்த்த ஷாருக்கானின் ரூ.13 கோடி ரோலெக்ஸ் வாட்ச் - அப்படி என்ன ஸ்பெஷல்?