Mari Selvaraj: வாழை 2 உருவாகிறதா? எனக்கு அப்படி படம் பண்ணனும் என ஆசை – மாரி செல்வராஜ் ஓபன் டாக்!

Mari Selvaraj About Vazhai 2:தமிழ் சினிமாவில் சில படங்களை இயக்கியிருந்தாலும், மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநராக இருந்துவருபவர் மாரி செல்வராஜ். இவரின் இயக்கத்தில் 2025 தீபாவளியை முன்னிட்டு பைசன் திரைப்படமானது வெளியாகவுள்ளது. மேலும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், எந்த மாதிரியான படம் எடுக்க ஆசை என்பது பற்றி பேசியுள்ளார்.

Mari Selvaraj: வாழை 2 உருவாகிறதா? எனக்கு அப்படி படம் பண்ணனும் என ஆசை - மாரி செல்வராஜ் ஓபன் டாக்!

மாரி செல்வராஜ்

Published: 

12 Oct 2025 16:37 PM

 IST

இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) தமிழ் சினிமாவில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான பரியேறும் பெருமாள் (Pariyerum Perumal) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் கதிர் மற்றும் கயல் ஆனந்தி இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது இவருக்கு பல விருதுகளை பெற்றுத்தந்தது என்றே கூறலாம். இந்த படத்தை தொடர்ந்து தனுஷின் (Dhanush) கர்ணன் (Karnan), மாமன்னன் மற்றும் வாழை (Vazhai) என இதுவரை 4 படங்களை இயக்கியிருக்கிறார். அதிலும் இந்த படங்கள் முழுக்க, தென் மாவட்டங்களை சார்ந்த கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படங்களில் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியான வாழை படமானது ஒட்டுமொத்தத் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றியிருந்தது. இந்த படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் இயக்கத்தில் 5வது படமாக தயாராகியுள்ளது பைசன் (Bison).

துருவ் விக்ரம் (Dhruv Vikram) மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது வரும் 2025 அக்டோபர் மாதம் 17ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ், வாழை 2 (Vazhai 2) படம் எடுக்கிறார் என்பது பற்றியும், தனது வாழ்க்கை பயணத்தை படமாக எடுப்பது பற்றியும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பராசக்தி படத்தின் ஷூட்டிங் முடிந்ததா? இணையத்தில் வைரலகும் வீடியோ!

தனது பயணத்தை படமாக எடுக்க ஆசை என மாரி செல்வராஜ் பேச்சு :

அந்த நேர்காணலில் பேசிய மாரி செல்வராஜ் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதில் அவரிடம் தொகுப்பாளர் நீங்கள் வாழை 2 படத்தை இயக்கவுள்ளதாக கேள்விப்படுகிறோம் அது உண்மையா ? எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த மாரிசெல்வராஜ், “வாழை 2 படம் நான் பண்ணுவேன் என சொல்லவில்லை. அந்த படம் எனது வாழ்கையில் ஒரு பகுதிதான். அது வேறு பெயரில் வரும். வாழை 2 படம் பண்ணவேண்டும் என்றாலே வாழை 1 படத்தின் தொடர்ச்சியாகத்தான் கொடுக்கமுடியும்.

இதையும் படிங்க: கஷ்டமான தருணங்களில் அப்பாதான் எல்லாம் – துருவ் விக்ரம் உருக்கம்

மேலும் எனது வாழ்க்கை பயணத்தை, எனது வாழ்கையை படமாக பண்ணவேண்டும் என ஐடியா எனக்கு இருந்தது, நான் இயக்குநராக ஆகும் வரையில், மேலும் சிறிய சிறிய படங்களாக எனது பயணத்தை படம் பண்ணவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அப்படி படம் பண்ணால் அதற்கு வேற வேற டைட்டில் இருக்கும், வேறு நபர்கள் இருப்பார்களே தவிர, அது தொடர்ச்சியான டைட்டில் கொண்ட படமாக இருக்காது. மேலும் எனது வாழ்க்கையில் வேறு எதாவது அதிர்வை வேறு டைட்டிலிதான் படமாக்குவேன்” என இயக்குநர் மாரிசெல்வராஜ் ஓபனாக பேசியுள்ளார்.

பைசன் பட ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து மாரிசெல்வராஜ் வெளியிட்ட பதிவு :

இந்த பைசன் படமானது வரும் 2025 அக்டோபர் 17ம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கும் நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 2025 அக்டோபர் 13ம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.