என் எண்ணத்தை உடைத்து நொறுக்கிய உணர்ச்சிமிக்க படைப்பாக இருந்தது ஹேப்பிராஜ் – மாரி செல்வராஜ்

Director Mari Selvaraj Praised Happy Raj Movie: நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் ஹேப்பி ராஜ். இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ் வெகுவாகப் பாராட்டி பதிவு ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

என் எண்ணத்தை உடைத்து நொறுக்கிய உணர்ச்சிமிக்க படைப்பாக இருந்தது ஹேப்பிராஜ் - மாரி செல்வராஜ்

ஹேப்பி ராஜ்

Published: 

28 Mar 2026 17:57 PM

 IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் இதுவரை வெளியான அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான இயக்குநராக வலம் வரும் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பைசன் காளமாடன். கபடி விளையாட்டை மையாக வைத்து உண்மைச் சம்பவங்கள் அடிப்படையில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் தனது அடுத்தப் படத்திற்கான பணிகளில் பிசியாக இருக்கிறார். மேலும் இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படம் குறித்த அப்டேட்களை அவ்வபோது பேட்டியில் மாரி செல்வராஜ் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி நேற்று மார்ச் மாதம் 27-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ஹேப்பி ராஜ் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். அந்தப் படம் குறித்து மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஹேப்பி ராஜ் படத்தை புகழ்ந்து தள்ளிய மாரி செல்வராஜ்:

அதன்படி மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது,ஹேப்பி ராஜ் திரைப்படம் பார்த்தேன். வெறும் கொண்டாட்டமும் குதூகலமும் மட்டுமே நிரப்பபட்டு வருகிற இன்னொரு சினிமாவாக இருக்கும் என்ற என் எண்ணத்தை உடைத்து நொறுக்கிய உணர்ச்சிமிக்க படைப்பாகவும் இருந்தது ஹேப்பிராஜ். குதிரைமுட்டை என்ற கேலி வார்த்தையையும் அதன் வலியையும் ஏற்று நடித்திருந்த ஜார்ஜ் மரியன் அவர்களின் இருப்பும் சிரிப்பும் பெரும் நம்பிக்கையை கொடுத்தது. நல்ல கதைக்குள் ஒரு அணிலை போல துள்ளி குதித்திருக்கும் ஜீ.வி பிரகாஷ் சார் அவர்களுக்கும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் ப்ரியமும் வாழ்த்துக்களும் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ரவிகுமார் இயக்கத்தில் உருவாகும் படத்திற்காக சூரி வாங்கும் சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல்

மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஒரு ஆண்டை நிறைவு செய்தது வீர தீர சூரன்… கொண்டாடும் ரசிகர்கள்

Follow Us
அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் - அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு
அதிகரிக்கும் போர் பதற்றம்.. 5 நாள் கெடு கொடுத்த அதிபர் டிரம்ப்..
"முன்பே வா" ரெய்னாவிற்கு மட்டுமல்ல.. தோனிக்கும் ரொம்ப பிடிக்கும்!.. ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த சுவாரசியம்!
ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம் - துரந்தர் 2 படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்