சிம்புவிற்கு முன்னதாக அந்த பிரபல நடிகரை இயக்கும் தேசிங்கு பெரியசாமி – வைரலாகும் தகவல்
Director Desingh Periyasamy: தமிழ் சினிமாவில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலம் ஆனவர் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. இவர் அடுத்ததாக எந்த நடிகரின் படத்தை இயக்க உள்ளார் என்பது குறித்த தகவலை தற்போது பார்க்கலாம்.

இயக்கும் தேசிங்கு பெரியசாமி
தமிழ் சினிமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி 2020-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்தப் படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான் நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். ரொமாண்டிக் ஹீட் காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை மக்கள் மட்டும் இன்றி பிரபலங்களும் கொண்டாடித் தீர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரபல நடிகர்கள் பலர் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியிடம் கதை கேட்க நினைத்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவர் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி படத்தை இயக்க உள்ளதாக முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்டத்தின் பணிகள் தொடர்ந்து தள்ளிப்போவதால் அதற்கு முன்னதக வேறு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் மணிகண்டனை இயக்கும் தேசிங்கு பெரியசாமி:
அதன்படி நடிகர் மணிகண்டன் நடிப்பில் ஒரு சிறிய பட்ஜெட்டில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகின்ற ஜூலை மாதம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Also Read… மங்காத்தா படத்தை ஏன் ஒத்திவைக்க சொல்லி கேட்கவில்லை… மோகன் ஜி விளக்கம்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
— After Kannum Kannum Kollaiyadithaal, #DesinghPeriyasamy was supposed to direct #STR50 with #SilambarasanTR. However, since the film required a huge budget, Desingh Periyasamy decided to make a smaller-scale film instead.
In this film, #Manikandan will play the lead role.
— The… pic.twitter.com/yLVUSHIY2k— Movie Tamil (@_MovieTamil) January 22, 2026
Also Read… சிவகார்த்திகேயன் நடிப்பில் 100 கோடி வசூலித்த படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ