Anil Ravipudi: தமிழ் ஆடியன்ஸ்க்கு ஜன நாயகன் ஒரு புது படம் – பகவந்த் கேசரி பட இயக்குநர் அனில் ரவிபுடி பேச்சு!
Anil Ravipudi About Jana Nayagan Story Changes: தென்னிந்திய சினிமாவில் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம்தான் ஜன நாயகன். இப்படம் தெலுங்கு பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என கூறப்படும் நிலையில், இந்த் ஜன நாயகன் படத்தின் கதை குறித்து பகவந்த் கேசரி பட இயக்குநர் அனில் ரவிபுடி மனம் திறந்துள்ளார்.

தளபதி விஜய் மற்றும் அனில் ரவிபுடி
தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர்தான் இயக்குநர் அனில் ரவிபுடி (Anil Ravipudi). இவர் நடிகர்கள் பாலகிருஷ்ணா (BalaKrishna) முதல் சிரஞ்சீவி (Chiranjeevi) போன்ற நடிகர்களை கொண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான படம் பகவந்த் கேசரி (Bhagavanth Kesari). இதில் பாலகிருஷ்ணா, ஸ்ரீலீலா மற்றும் காஜல் அகர்வால் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது தேசிய விருதையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கதையில்தான் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) கடைசி படமான ஜன நாயகன் (Jana Nayagan) தமிழில் உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படம் சென்சார் பிரச்சனையின் காரணமாக இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.
மேலும் இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் “மன சங்கர வர பிரசாத் காரு” என்ற படமானது இன்று 2026 ஜனவரி 12ம் தேதியில் ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் அனில் ரவிபுடி, ஜன நாயகன் படத்தின் கதைக்கும் மற்றும் பகவந்த் கேசரி படத்திற்கும் உள்ள வேறுபாடு குறித்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பொங்கலுக்கு ஜன நாயகன் வெளியாகாதது வருத்தமளிக்கிறது – நடிகர் ஜீவா
ஜன நாயகன் படம் குறித்து இயக்குநர் அனில் ரவிபுடி பேசிய விஷயம்:
அந்த நேர்காணலில் இயக்குநர் அனில் ரவிபுடி, “ஜன நாயகன் படக்குழுவினர் பகவந்த் கேசரி படத்தின் அடிப்படை கதையை எடுத்துள்ளனர். ஆனால் இப்படத்தின் முதல் 20 நிமிடங்கள். இடைவெளி மற்றும் இரண்டாவது பகுதியில் சில பகுதிகளை மீண்டும் உருவாக்கியுள்ளனர். மேலும் இந்த படத்தில் அவர்கள் வில்லனின் பாதயையையும் முற்றிலும் மாற்றியுள்ளனர்.
இதையும் படிங்க : சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபுவின் படம் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்
மேலும் இப்படத்தில் ரோபோ மற்றும் அறிவியல் புனைகதைங்களையும் இணைந்துள்ளனர். இந்த ஜன நாயகன் படமானது முற்றிலும் தமிழ் பார்வையாளர்களுக்கு ஒரு புது கதையாகத்தான் இருக்கும்” என அவர் அதில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஜன நாயகன் படம் குறித்து இயக்குநர் அனில் ரவிபுடி பேசிய வீடியோ பதிவு :
“#JanaNayagan team has remade basic soul of #BhagavanthKesari like opening 20 mins, interval & some portions in second half. They have completely changed Villain track & included Robot sci-fi element. For Tamil audience it’s fresh subject”
– #AnilRavipudipic.twitter.com/RGyxq28tdh— AmuthaBharathi (@CinemaWithAB) January 11, 2026
தளபதி விஜய்யின் இந்த ஜன நாயகன் படமானது கடந்த 2026 ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவேண்டிய படம். இதன் சென்சார் பிரச்சனை தற்போதுவரையிலும் தீராத நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்திலும் நடைபெற்றுவருகிறது. விரைவில் இப்படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.