கட்டிப்புடி கட்டிப்புடி டா பாடல் இப்படிதான் உருவாச்சு – எஸ்.ஜே.சூர்யா சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

S.J. Suryah: இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் குஷி. இந்தப் படம் கடந்த 19-ம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கட்டிப்புடி கட்டிப்புடி டா பாடல் இப்படிதான் உருவாச்சு - எஸ்.ஜே.சூர்யா சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

எஸ்.ஜே.சூர்யா

Published: 

21 Sep 2025 14:29 PM

 IST

கோலிவுட் சினிமாவில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான படம் வாலி. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் எஸ்.ஜே.சூர்யா (SJ Suryah). இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் நாயகனாகவும் வில்லனாகவும் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே எஸ்.ஜே.சூர்யா தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜயை வைத்து படத்தை இயக்கினார் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. அதன்படி கடந்த 2000-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் குஷி. தேஜாவு என்ற கான்செப்டை தமிழக ரசிகர்களுக்கு அறிமுகப்படித்தியது இந்தப் படம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நாயகியாக நடிகை ஜோதிகா நடித்து இருந்தார். இவரின் நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டு விழாவில் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கட்டிப்புடி கட்டிப்புடி டா பாடல் இப்படிதான் உருவாச்சு:

குஷி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல இசையமைப்பாளர் தேவா இசையில் இந்தப் படத்தில் வெளியான பாடல்களும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா பேசியபோது குஷி படத்தில் வெளியான கட்டிப்புடி கட்டிப்புடி டா பாடல் எப்படி உருவாச்சு என்பது குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதன்படி பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான செந்தமிழ் தேன் மொழியா என்ற பாடலின் அடிப்படையை வைத்தே இந்த கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல் உருவானதாகவும் இந்தப் பாடலை மீண்டும் திரையரங்குகளில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… அமேசான் ஓடிடியில் பதறவைக்கும் இந்த த்ரில்லர் படமான எல வீழா பூஞ்சிரா படத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

இணையத்தில் கவனம் பெறும் எஸ்.ஜே.சூர்யாவின் பேச்சு:

Also Read… ராஜமௌலி இயக்கத்தில் கூட நடிச்சுட்டேன்… ஆனா தனுஷ் கூட வேலை செய்வது கடினம் – சத்யராஜ்