மீண்டும் தள்ளிப்போகிறதா விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் ரிலீஸ்?

நடிகர் விஜய் தேவரகொண்ட நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் கிங்டம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தும் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாமல் உள்ளது. முன்னதாக இரண்டு முறை படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீண்டும் தள்ளிப்போகிறதா விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் ரிலீஸ்?

கிங்டம்

Published: 

10 Jun 2025 21:18 PM

 IST

பிரபல இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கிங்டம். நடிகர் விஜய் தேவரகொண்டா (Actor Vijay Devarakonda) நாயகனாக இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மேலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்பை திரில்லர் படமாக உருவாகியுள்ள இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சத்யதேவ் மற்றும் கௌஷிக் மகாதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தப் படம் மார்ச் மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பின்பு சில காரணங்களால் படத்தின் வெளியிட்டை ஒத்திவைத்தது. அதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டை மே மாதம் 30-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

கிங்டன் படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்த படக்குழு:

ஆனால் நாட்டில் போர் சூழல் நிலவி வந்ததால் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று முடிவு செய்த படக்குழு படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்தி வைத்தது. அதன்படி விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள கிங்டம் படத்தை ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

மீண்டும் தள்ளிப்போகும் கிங்டம் படத்தின் ரிலீஸ்?

முன்னதாக மூன்று முறை நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கிங்டம் படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது படக்குழு மீண்டும் படத்தின் வெளியீட்டை ஒத்தி வைக்க வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் எக்ஸ் தள பதிவு:

நடிகர் விஜய் தேவரகொண்டா கிங்டம் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதுகுறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா தனது 36-வது பிறந்த நாளில் தனது எக்ஸ் தள பக்கத்தில் படத்தின் புகைப்படங்கள் வெளியிட்டு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் கிங்டம் படத்துடன் சேர்த்து இன்னும் இரண்டு படங்கள் வரிசையில் உள்ளது தெரியவந்தது, இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Related Stories
தமிழில் 2 படம்தான்.. ஆனால் பான் இந்திய பேமஸ்.. இந்த போட்டோவில் இருக்கும் சிறுமி யாருனு தெரிகிறதா?
2025ல் டிரென்டிங்.. இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படத்தின் ட்ரெய்லர் எது தெரியுமா? முழு விவரங்கள் இதோ!
Jana Nayagan: லியோவை முந்திய ஜன நாயகன்.. டிக்கெட் முன்பதிவில் சாதனை.. வைரலாகும் பதிவு!
Suriya47: சிங்கம் இஸ் பேக்.. போலீஸ் அதிகாரி வேடத்தில் சூர்யா. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
DC Movie: லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ பட முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு.. புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன்!
Kombuseevi: சரத்குமார் – சண்முக பாண்டியனின் அதிரடி கதையில்… கொம்புசீவி படம் எப்படி இருக்கு.. விமர்சனங்கள் இதோ!
பலத்த காற்றால் சாய்ந்த சுதந்திர தேவி சிலை - பிரேசிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கைலாச மலை – யாரும் ஏற முடியாத தீராத மர்மம்
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கும் சாய் பல்லவி?
ஜிம்மில் பயிற்சி செய்தபோது திடீரென பார்வை இழந்த 27 வயது இளைஞர்