Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கூலி படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிகர் ரஜினிகாந்த் எப்படி நடித்துள்ளார் தெரியுமா? வைரலாகும் தகவல்

Actor Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆக்‌ஷன் காட்சிகளில் எப்படி நடித்துள்ளார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

கூலி படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிகர் ரஜினிகாந்த் எப்படி நடித்துள்ளார் தெரியுமா? வைரலாகும் தகவல்
கூலி படத்தில் ரஜினிகாந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 30 May 2025 11:28 AM IST

நடிகர் ரஜினிகாந்த் (Actor Rajinikanth) நடிப்பில் இறுதியாக வெளியான படம் வேட்டையன். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி வைத்தார். இந்த கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியான போது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். பிறகு நடிகர் ரஜினிகாந்தின் படத்திற்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டதாகவும் அது தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை மாபெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த 2024-ம் ஆண்டு இறுதியில் இந்தப் படத்தின் நடிகர்கள் குறித்த அப்டேட்டை தொடர்ந்து படக்குழு வெளியிட்டது. கூலி படத்தில் பான் இந்தியாவில் பிரபலமான பல நடிகர்கள் நடிக்கிறார்கள். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் நாகர்ஜுனா, மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சௌபின் ஷாகிர், கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் உபேந்திரா ராவ் என பலர் நடிக்கின்றனர்.

இவர்களுடன் இணைந்து தமிழில் இருந்து நடிகர்கள் ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர் கான் இந்தப் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் பரவியது. இதற்கு காரணம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அமீர் கானுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் தான்.

படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீஸிற்காக போஸ்ட் புரெடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் படம் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பேட்டியும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்த நிலையில் 74-வயதுடைய நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் எப்படி நடித்தார் என்பது குறித்த அப்டேட்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில், ஆரம்பத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்தின் ஷூட்டிங்கிற்காக 70 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

ஆனால் நடிகர் ரஜினிகாந்திற்கு பதிலாக சில கடினமான சண்டைக் காட்சிகளை நடிக்க சுமார் 45 நாட்களுக்கு டூப் போட ஒருவரை படக்குழு நியமித்ததாகக் கூறப்படுகிறது. நடிகர் ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு படக்குழு இப்படி செய்தகாகக் கூறப்படுகின்றது. முன்னதாக கூலி படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிகிச்சைக்கு பிறகு சிறிது நாட்கள் ஓய்வில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். தற்போது கூலி படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதால் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.