போட்டோவில் கியூட்டாக போஸ் கொடுக்கும் சிறுவன் யார் தெரியுமா? நடிகரின் மகன் டூ பிரபல நாயகனாக மாறியவர்!
Kollywood Actor Childhood Photo: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் தொடர்ந்து படங்களில் ஹிட் கொடுக்கும்போதே அவர்களின் மகன் அல்லது மகளையும் சினிமாவில் அறிமுகம் செய்கின்றனர். அந்த விதத்தில் இந்த் போட்டோவில் கியூட்டாக போஸ் கொடுக்கும் சிறுவன் யார் தெரியுமா?. இது குறித்த விவரங்கள் இதோ.

தமிழ் நடிகரின் சிறுவயது புகைப்படம்
சினிமாவை பொறுத்தவரையில் கதாநாயகனாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்கள், அவர்களை தொடர்ந்து அவர்களின் குழந்தைகளையும் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகம் செய்துவைக்கின்றனர். அந்த விதத்தில் மேலே புகைப்படத்தில் இருக்கும் கியூட் சிறுவன், பிரபல நடிகரின் மகன் ஆவார். இந்த சிறுவனின் தந்தை, இயக்குநர்கள் ஷங்கர் (Shankar) முதல் மணிரத்னம் (Mani Ratnam) வரை தமிழ் சினிமாவில் சிகரம் தொட்ட இயக்குநர்களுடன் படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். அந்த விதத்தில் இவரின் பல படங்கள் வெற்றிப்படங்களாக ஹிட் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் இவரின் மகனாக சினிமாவில் நுழைந்தவர்தான் இந்த சிறுவன். இவர் தனது முதல் படமே தெலுங்கு ரீமேக் (Thelugu Remake) திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக நுழைந்தார். முதல் படத்திலே நெருக்கமான காட்சிகளில் நடித்து பிரபலமானார். பின் மீண்டும் இயக்குநர் பாலாவின் (Bala) இயக்கத்திலும் அதே ரீமேக் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்போதும் இளம் கதாநாயகனாக ரசிகர்களை கவர்ந்துவருகிறார் இவர். இவர் இறுதியாக மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கத்தில் புது படத்தில் நடித்திருந்தார். அந்த படமானது ரூ 80 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் வேறுயாருமில்லை, சியான் விக்ரமின் (Chiyaan Vikram) மகன், நடிகர் துருவ் விக்ரம் (Dhruv Vikram) தான்.
இதையும் படிங்க: 6 வருடங்களை நிறைவு செய்த ஓ மை கடவுளே படம்… அசோக் செல்வன் குறித்து நெகிழ்ந்து பேசிய அஸ்வத் மாரிமுத்து
நடிகை துருவ் விக்ரம் வெளியிட்ட லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு :
கோலிவுட் சினிமாவில் சிறந்த நடிகராக இருந்துவருபவர் சியான் விக்ரம். இவர் சினிமாவில் தற்போது பிரம்மாண்ட படங்களில் நடித்துவரும் நிலையில், இவரின் மகனான துருவ் விக்ரமையும் பாடங்ககளில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளியான ஆதித்ய வர்மன் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக நுழைந்தார். இப்படம் தெலுங்கு திரைப்படமான அர்ஜுன் ரெட்டி படத்தின் தாமல் ரீமேக் ஆகும். இப்படத்தில் ஆக்ஷன் நாயகனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து வர்மா என்ற படத்திலும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் SK26 பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது? – வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்!
பின் தனது தந்தையான விக்ரமுடன் மகான் என்ற படத்தில் நடித்திருந்தார். இதை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க, கடந்த 2022ம் ஆண்டில் வெளியானது. இப்படம் இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. மேலும் இவர் இறுதியாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்ற படத்தில் நடித்திருந்தார். உண்மையை சொல்லப்போனால் இதுதான் இவர் கதாநாயகனாக, எந்த ரீமேக்கும் இல்லாமல் சாதாரணமாக நடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படம் சிறப்பான வரவேற்பை கொடுத்தது. மேலும் இவர்புது திரைப்படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.