பைசன் தான் என் முதல் படம்னு நான் நினைக்கிறேன் – துருவ் விக்ரம் சொன்ன விசயம்!

Dhruv Vikram: நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் பைசன் காளமாடன். இந்தப் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் துருவ் விக்ரம் பேசியது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

பைசன் தான் என் முதல் படம்னு நான் நினைக்கிறேன் - துருவ் விக்ரம் சொன்ன விசயம்!

பைசன்

Published: 

06 Oct 2025 12:04 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவரது மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகர் துருவ் விக்ரம் (Actor Dhruv Vikram). இவர் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ம் தேதி வெளியான ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இது தெலுங்கு சினிமாவில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இந்தப் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் வெளியாகி இருந்தாலும் பான் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து இந்த அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்தனர். அந்தப் படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் மகான். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். நடிகர் விக்ரம் நாயகனாக நடித்து இருந்த இந்தப் படத்தில் அவரது மகனாகவே துருவ் விக்ரம் அசத்தி இருப்பார். இந்த மகான் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க நடிகர் துருவ் விக்ரம் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

பைசனுக்காக என்னுடைய 100 சதவீத உழைப்பை கொடுத்துள்ளேன்:

இந்தப் படத்திற்கு பைசன் காளமாடன் என்று பெயர் வைக்கப்பட்டது. படத்தில் நடிகர் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேசுவரன் நடித்து உள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தின் நிகழ்ச்சி சமீபத்தில் நடைப்பெற்றபோது நடிகர் துருவ் விக்ரம் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அதில் நடிகர் துருவ் விக்ரம் பேசியதாவது, என் பெயர் துருவ், நான் இதுவரை இரண்டு படங்கள் பண்ணியிருக்கேன். அந்த இரண்டு படங்களையும் நீங்க பாக்கலன்னாலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா பைசன் நீங்க பாக்கணும், இது என்னோட முதல் படம் என்றுதான் நான் நினைக்கிறேன். நான் இதுக்கு என் 100%  உழைப்பை கொடுத்திருக்கேன். மாரிசெல்வராஜ் சார் ‘எரங்கி சம்பவம் பண்ணிருக்காரு. நீங்க குடும்பத்தோடவோ, காதலியோ, காதலனோடவோ போகலாம், ஆனா நீங்க எல்லாரும் பாக்கணும் என்று பேசியுள்ளார்.

Also Read… அரோரா குறித்த தவறான எண்ணம் மாறனும் – ரியா சொன்ன விசயம்!

இணையத்தில் கவனம் பெறும் துருவ் விக்ரமின் பேச்சு:

Also Read… வாட்டர் மெலன் திவாகரை கலாய்த்த ரசிகர்கள் – சட்டென கடுப்பான விஜய் சேதுபதி