Dhanush: ‘விஜய் சார் எப்போதுமே சைலண்டாதான் இருப்பாரு’ – தனுஷ் பகிர்ந்த விஷயம்!
Dhanush On Vijays Personality : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் தனுஷ். இவர் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் தளபதி விஜய் குறித்து அவர் பேசியுள்ளார். அது என்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

விஜய் மற்றும் தனுஷ்
நடிகர் தனுஷ் (Dhanush) தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தேரே இஷக் மே (Tere Ishq Mein). கடந்த 2025 நவம்பர் மாதத்தில் வெளியான இப்படத்தில் தனுஷ் மற்றும் க்ரித்தி சனோன் (Kriti Sanon) இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது கடந்த 2025ம் ஆண்டில் வெளியான தனுஷ் படங்களில் அதிகம் வசூலித்த திரைப்படமாகவே அமைந்திருந்தது. இந்த படத்தை இந்தி இயக்குநர் ஆனந்த் எல் ராய் (Anand L Rai) இயக்கியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக தொடர்ந்து புது தமிழ் படங்களிலும் இவர் நடித்துவருகிறார். மேலும் தனுஷ் மற்றும் தளபதி விஜய் (Thalapathy Vijay) இருவருமே சினிமாவில் நல்ல நண்பர்களில் ஒருவராக இருந்துவருகின்றனர்.
இவர் தளபதி விஜய்யின் ஜன நாயகன் (Jana Nayagan) படத்தின் ஆடியோ லாஞ்சில் கலந்துகொள்வார் என வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் அதில் கலந்துகொள்ள்ளவில்லை. இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த தனுஷ், அதில் தளபதி விஜய்யின் குணம் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: ரிலீஸ் தேதியை லாக் செய்த சசிகுமாரின் ‘மை லார்ட்’ படக்குழு.. வெளியான அறிவிப்பு இதோ!
தளபதி விஜய் குறித்து பகிர்ந்த நடிகர் தனுஷ்:
அந்த நேர்காணலில் நடிகர் தனுஷிடம் தொகுப்பாளர், “விஜய் எப்படிப்பட்ட நபர்?..எப்போதுமே அமைதியாகத்தான் இருப்பாரா?” என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த தனுஷ், ” விஜய் அண்ணா எப்போதுமே சைலண்டாக நபர்தான். எப்போதும் அமைதியாகவே இருப்பாரு, அவரை சுற்றியுள்ள விஷயங்களை கவனித்துக்கொண்டே இருப்பார். ஆனால் அவருக்கு நெருக்கமான, அவர் எப்போதும் ஜாலியாக இருக்கும் நபர்கள் அவருடன் இருந்தால் அதற்கு அப்படியே வேறு ஒரு நபராக மாறிவிடுவார். அப்போது அவரைப்போல ஜாலியான நபரை யாராலும் பார்க்கமுடியாது” என அவர் அதில் தெரிவித்திருந்தார்.
தனுஷ் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
நடிகர் தனுஷின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து கிட்டத்தட்ட 4 படங்கள் வரிசை கட்டி நிற்கிறது. அதில் இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் உருவான கர படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இதனையடுத்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் டி55 படத்தில் நடிக்கவுள்ளார்.
இதையும் படிங்க: அபிஷன் ஜீவிந்தின் முதல் படம் மாதிரி இல்லை – வித் லவ் படம் குறித்து இயக்குநர் சிபி சக்கரவர்த்தி பேச்சு!
இதன் பின் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் டி 56 மற்றும் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் டி57 போன்ற படங்களிலும் தனுஷ் நடிக்கவுள்ளார். இதில் டி55 படத்தின் ஷூட்டிங் வரும் 2026 பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் துவங்குவதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.