Sirai Movie: ஒரு கைதியின் காதல் கதையில் அதிரடி திருப்பம்.. வெளியானது விக்ரம் பிரபுவின் ‘சிறை’ பட ட்ரெய்லர்!
Vikram Prabhu Sirai Movie Trailer: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விக்ரம் பிரபு. இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான கதைக்களத்தில் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் விரைவில் வெளியாக காத்திருக்கும் படம்தான் சிறை. தற்போது இப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

சிறை படத்தின் ட்ரெய்லர்
நடிகர் விக்ரம் பிரபு (Vikram Prabhu) தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் காதி (Gaadi). நடிகை அனுஷ்கா ஷெட்டியின் (Anushka Shetty) நடிப்பில் வெளியான இப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்து அசத்தியிருந்தார். இதன் மூலம் தெலுங்கில் இவர் ஹீரோவாக அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்ததாக லவ் மேரேஜ் (Love Marriage) என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார். தமிழில் வெளியான இப்படம் இவருக்கு சரியான வரவேற்பை கொடுக்கவில்லை. இப்படங்களைத் தொடந்து இந்த 2025ம் ஆண்டில் 3வது வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் சிறை (Sirai). இந்த படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி (Suresh Rajakumari) இயக்க, இயக்குநர் தமிழ் (Thamizh) இணைந்து எழுதிய கதையாகும். இந்த படத்தில் விக்ரம் பிரபு, அக்சய் குமார், ஆனந்த தம்பிராஜ் மற்றும் அனிஷிமா அனில்குமார் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் விறுவிறுப்பான, ஆக்ஷன் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்துள்ளது.
இப்படமானது வரும் 2025 டிசம்பர் 25ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இன்னும் இப்படத்தின் வெளியீட்டிற்கு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், படக்குழு ட்ரெய்லரை வெளியிட முடிவு செய்துள்ளது. அதன்படி இப்படத்தின் ட்ரெய்லரை இன்று (2025 டிசம்பர் 12ம் தேதி) நடிகர் தனுஷ் (Dhanush) தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: இது டிசம்பர் மாதமா? இல்ல ஒத்திவைப்பு மாதமா? இந்த மாதத்தில் ஒத்திவைக்கப்பட்ட படங்கள் என்னென்ன தெரியுமா?
நடிகர் தனுஷ் வெளியிட்ட சிறை திரைப்படத்தின் ட்ரெய்லர் பதிவு :
Heartfelt congratulations to @lk_akshaykumar on his debut.
Here is #SiraiTrailer for all of you https://t.co/3y21SAPqYt@iamVikramPrabhu @7screenstudio
— Dhanush (@dhanushkraja) December 12, 2025
சிறை படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு:
இந்த சிறை படத்தில் நடிகர் விக்ரம் பிரபு ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஒரு கொலை குற்றவாளியை கோர்ட்டில் ஆஜர் செய்வதற்காக அழைத்து செல்வது போல இந்த படத்தின் கதை தொடங்குகிறது. இதில் அந்த குற்றவாளியை அழைத்து செல்லும் வழியில், அவர் தப்பிவிடுகிறார். அவர் எதற்காக தப்பிக்கிறார் மற்றும் அவரை மீண்டும் பிடிப்பாரா என்ற விறுவிறுப்பான கதையில் இந்த சிறை படம் அமைந்துள்ளது. மேலும் அந்த குற்றவாளி எற்காக கொலை செய்தார் மற்றும் அவரின் காதல் குறித்த கதைக்களத்தில் இந்த படமானது உருவாகியுள்ளது என்று இப்படத்தின் ட்ரெய்லரில் தெரிகிறது. மேலும் இந்த படத்தின் கதை கிட்டத்தட்ட மைனா படத்தின் கதையை போலவே அமைந்துள்ளது என்று கூறலாம்.
இதையும் படிங்க: ஹேப்பி பர்த்டே சூப்பர் ஸ்டார்.. ஜெயிலர் 2 பட ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த்!
மேலும் மற்ற படங்களை ஒப்பிடும்போது விக்ரம் பிரபுவின் கதாபாத்திரம் இப்படத்தில் வித்தியாசமாகவே அமைந்துள்ளது. இப்படம் வரும் 2025 டிசம்பர் 25ம் தேதியில் கிறித்துமஸ் பண்டிகையில் வெளியாகவும் நிலையில் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. விக்ரம் பிரபுவின் நடிப்பில் இந்த் 2025ம் ஆண்டில் வெளியாகும் 3வது படம் என்ற நிலையில், இது அவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.