Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kuberaa : எப்படி இருக்கிறது தனுஷின் குபேரா?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!

Kuberaa Movie Review | நடிகர்கள் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள குபேரா திரைப்படம் இன்று (ஜூன் 20, 2025) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. காலை முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் திரைப்படம் எப்படி உள்ளது என்பது குறித்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Kuberaa : எப்படி இருக்கிறது தனுஷின் குபேரா?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
குபேரா
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Jun 2025 08:15 AM

தனுஷ் நடிப்பில் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான குபேரா திரைப்படம்,  இன்று (ஜூன் 20, 2025) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை தெலுங்கு திரைப்பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கி உள்ளார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்திரம் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ள நிலையில், தெலுங்கு சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக விளங்கும் நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாப்பாத்திரல் நடித்துள்ளார். மிகவும் புதிய மற்றும் வலுவான கூட்டணியாக இது அமைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில், குபேரா திரைப்படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா, இல்லையா என்பது குறித்து விரிவாக பார்க்கமால்.

எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா தனுஷின் குபேரா திரைப்படம்?

குபேரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், இசை நடிப்பு என தங்களுக்கு பிடித்த அம்சங்கள் குறித்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் சிறப்பான பிஜிஎம்

தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை மிகவும் பிரமாதமாக உள்ளதாகவும், படத்தின் இரண்டாவது பாதியில் எமோஷனல் காட்சிகள் மிக சிறப்பாக உள்ளதாகவும் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

முதல் பாதி சிறப்பு

திரைப்படத்தின் முதல் பாதி சிறப்பாக உள்ளது. நாகார்ஜூனா நடிப்பு சிறப்பாக உள்ளது. திரைப்படத்தின் இயக்குநர் சிறப்பான பணியை செய்துள்ளார் என்று ஒருவர் கூறியுள்ளார்.

இரண்டாவது பாதி சிறப்பாக உள்ளது

திரைப்படத்தின் இரண்டாவது பாதி சிறப்பாக உள்ளதாகவும், ஆனால் கிளைமாக்ஸை எப்படி முடிப்பது என தெரியாமல் முடித்ததை போல உள்ளதாகவும் ஒருவர் கூறியுள்ளார். மேலும், எதுவாயினும் முழுமையாக பார்க்கும்போது இது ஒரு சிறந்த படமாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.