Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dhanush : வடசென்னை 2 ஷூட்டிங் எப்போது..? குபேரா இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் கொடுத்த அப்டேட்!

Vada chennai 2 Shooting Update : இந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் குபேரா திரைப்படம் ரிலீசிற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நடந்த நிலையில், தனுஷ் வடசென்னை 2 படத்தின் ஷூட்டிங் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

Dhanush : வடசென்னை 2 ஷூட்டிங் எப்போது..? குபேரா இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் கொடுத்த அப்டேட்!
வட சென்னை 2Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 02 Jun 2025 15:29 PM IST

கோலிவுட் சினிமாவையும் கடந்து, ஹாலிவுட் வரை படங்களில் நடித்துவருபவர் நடிகர் தனுஷ் (Dhanush). இவரின் முன்னணி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம்தான் குபேரா (Kuberaa). இந்த படத்தைப் பிரபல டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலா (Shekhar Kammula)  இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த குபேரா படத்தில் தனுஷுடன் நடிகர்கள் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna), ஜிம் சார்பா மற்றும் பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த குபேரா திரைப்படமானது அரசியல் சார்ந்த திரில்லர் கதைக்களத்துடன் தயாராகியுள்ளது. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் தனுஷின் நடிப்பில் இறுதியாகத் தமிழில் ராயன் (Raayan) படமானது வெளியானது. இந்த படத்தை நடிகர் தனுஷ் இயக்கி, அதில் முன்னணி கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.

இந்த படத்தைத் தொடர்ந்து இவரின் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை போன்ற படங்கள் உருவாகியுள்ளது. இதில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படம் ரிலீசாகி ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து இட்லி கடை என்ற படம் ரிலீசிற்கு காத்திருக்கிறது.

இந்நிலையில், வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னை சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ், வடசென்னை 2 படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட்டை கூறியுள்ளார்.

வடசென்னை 2 குறித்து நடிகர் தனுஷ் கொடுத்த அப்டேட் :

குபேரா படத்தின் இசை வெளியீடு விழாவிலே கலந்துகொண்ட நடிகர் தனுஷ், ரசிகர்களின் ஆசைக்கு இணங்க வடசென்னை 2 படம் பற்றிப் பேசியுள்ளார். அதில் பேசிய தனுஷ், “வடசென்னை 2 படத்தின் ஷூட்டிங் அடுத்த 2026ம் ஆண்டு ஆரம்பிக்கும். இவ்வளவு வருசமா கேட்டுகிட்டே இருக்கீங்க, வடசென்னை 2 படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் நிச்சயம் ஆரம்பிக்கும்” என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார். மேலும் வடசென்னை 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வரும் 2025, ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறிவருகின்றன.

நடிகர் தனுஷ் பேசிய வீடியோ ;

வடசென்னை திரைப்படம் :

இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்திருந்த படம்தான் வடசென்னை. கடந்த 2018ம் ஆண்டு இந்த திரைப்படமானது வெளியானது. இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் , ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா , சமுத்திரக்கனி எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் வரிசையாகப் பல படங்களில் நடித்து வந்தார். மேலும் இந்த வடசென்னை படத்தில் பாகம் 2 எப்போது உருவாகும் என ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில், சமீபத்தில் குபேரா படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய நடிகர் தனுஷ், அப்டேட்டை கூறியுள்ளார். அதன்படி வடசென்னை 2 படத்தின் ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டு தொடங்கும் என்று கூறப்படுகிறது.