நடிகர் தனுஷின் குபேரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

Actor Dhanush Kubera Movie OTT Update: நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது குபேரா படம். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

நடிகர் தனுஷின் குபேரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

குபேரா

Published: 

21 Jun 2025 16:54 PM

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் குபேரா (Kuberaa Movie). இந்தப் குபேரா படம் நேற்று ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் குபேரா படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி டைம்ஸ் நவ் செய்திகள் வெளியிட்டுள்ள செய்தியின்படி குபேரா படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ப்ரைம் வீடியோ (Amazon Prime Video) ரூபாய் 50 கோடிடிக்கு வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மற்ற செய்தி நிறுவனங்களிலும் இதே தகவல்கள் தான் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் படக்குழு தரப்பில் இருந்து இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான குபேரா படம்:

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவான படம் குபேரா. நடிகர் தனுஷ் நாயகனாக நடித்த இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டும் இன்றி மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த குபேரா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள நிலையில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் நாகர்ஜுனா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

நடிகர் தனுஷின் 51-வது படமான இதில் இதுவரை எந்தப் படத்திலும் ஏற்று நடிக்காத பிச்சைக்காரன் கதாப்பாத்திரத்தில் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைப் பாராட்டும் ரசிகர்கள் குபேரா படத்தில் நடிகர் தனுஷின் நடிப்பிற்காக நிச்சயமாக தேசிய விருது வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

ஹைதராபாத்தில் குபேரா படத்தின் வெற்றி விழாவைக் கொண்டாடியப் படக்குழு:

படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் குபேரா படக்குழு இன்று ஹைதராபாத்தில் வெற்றி விழாவைக் கொண்டாடி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.