Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இணையத்தில் கவனம் பெறும் சோனியா அகர்வாலின் கிப்ட் பட டீசர்!

Gift Official Teaser | கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்தார் சோனியா அகர்வால். தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கிய இவர் தொடர்ந்து படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள கிப்ட் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

இணையத்தில் கவனம் பெறும் சோனியா அகர்வாலின் கிப்ட் பட டீசர்!
சோனியா அகர்வாலின் கிப்ட்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Jun 2025 16:01 PM

இயக்குநர் பா பாண்டியன் (Director Pa Pandiyan) எழுதி இயக்கி உள்ள படம் கிப்ட். இந்தப் படத்தை இவரே தயாரித்தும் உள்ளார். மேலும் நாயகியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகை சோனியா அகர்வால் (Actress Sonia Agarwal) நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிர்லா போஸ், சூப்பர் குட் சுப்ரமணி, கொக்கு மனோகர், சசி லயா, ரேகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அமர சி.வி. இசைமைத்து உள்ளார். தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் கதைகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் சோனியா அகர்வாலின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த கிப்ட் படமும் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சோனியா அகர்வாலின் கிப்ட் பட டீசரில் கூறுவது என்ன?

கிப்ட் படத்தின் டீசரைப் பார்க்கும் போது நடிகை சோனியா அகர்வால் இதில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். தான் எடுக்கும் கேசுகளை உடனே முடித்துவிடுவோம் என்றும் ஆனால் இந்த வழக்கு அப்படி இல்லை என்று கூறுகிறார். ஒரு கூட்டுப் பாலியல் வழக்கை சோனியா அகர்வால் விசாரித்து வருகிறார் என்பது தெரிகிறது.

மேலும் அந்த வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் யார் என்பதை விசாரித்து வரும் சோனியா அகர்வால் அதனை எப்படி முடிக்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தின் டீசர் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிப்ட் பட டீசர் குறித்து சோனியா அகர்வால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

தமிழில் நடிகை சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான படங்கள்:

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடிகையாக வலம் வருபவர் சோனியா அகர்வால். இவர் தமிழில் 2003-ம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நாயகனா நடித்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார்.

அதனைத் தொடர்ந்து தமிழில் நடிகை சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான கோவில், மதுர, 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, ஒரு நாள் ஒரு கனவு, திருட்டுப்பயலே, புதுப்பேட்டை, வானம், சதுரங்கம், ஒரு நடிகையின் வாக்குமூலம், பாலக்காட்டு மாதவன், தடம், அயோக்யா என பலப் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.