AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kuberaa : தனுஷ் குபேரா ட்ரெய்லர் ரிலீஸ் ஒத்திவைப்பு.. எப்போது வெளியாகும் தெரியுமா?

Kuberaa Movie Trailer : தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக இருந்து வருபவர் சேகர் கம்முலா. இவரின் இயக்கத்தில் நாகார்ஜுனா மற்றும் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம்தான் குபேரா. இன்று 2025, ஜூன் 13ம் தேதியில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகவிருந்த நிலையில், படக்குழு ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளது.

Kuberaa : தனுஷ் குபேரா ட்ரெய்லர் ரிலீஸ் ஒத்திவைப்பு.. எப்போது வெளியாகும் தெரியுமா?
குபேரா திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Jun 2025 17:38 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாகப் பல ஹிட் படங்களை கொடுத்து வருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும் படங்கள் வெளியாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் தெலுங்கில் (Telugu) மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம்தான் குபேரா (Kuberaa). இந்த படமானது நடிகர் தனுஷின் 51வது திரைப்படமாகக் கடந்த 2023ம் ஆண்டின் இறுதியில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தைப் பிரபல தெலுங்கு மொழி இயக்குநர் சேகர் கம்முலா (Sekhar Kammula) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை, அமிகோஸ் கிரியேஷன்ஸ் (Amigos Creations) கீழ் தயாரிப்பாளர்கள் சுனில் நரங் மற்றும் புஸ்கூர் ராம்மோகன் ராவ் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் (Devi Sri Prasad) இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் தனுஷின் ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) இணைந்து நடித்திருக்கிறார். மேலும் நடிகர் தனுஷிற்கு இணையான ரோலில் நடிகர் நாகார்ஜுனாவும் (Nagarjuna) இணைந்து நடித்திருக்கிறார். பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த குபேரா வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சி இன்று 2025, ஜூன் 13ம் தேதியில் நடைபெறவிருந்த நிலையில், அகமதாபாத்தில் விமான விபத்தின் காரணமாகப் படக்குழு வரும் 2025, ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து. மேலும் குபேரா படத்தின் ட்ரெய்லரும் இன்று 2025, ஜூன் 13ம் தேதியில் வெளியாகவிருந்த நிலையில், படக்குழு அதை நாளை 2025, ஜூன் 14ம் தேதியில் வெளியாகும் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குபேரா படக்குழு வெளியிட்டபதிவு :

குபேரா படத்தின் பட்ஜெட் :

நடிகர்கள் நாகார்ஜுனா மற்றும் தனுஷின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த குபேரா படமானது, அரசியல் மற்றும் குற்றம் சார்ந்த திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இது குறித்து இயக்குநர் சேகர் கம்முலவே கூறியிருந்தார். அந்த அளவிற்கு இப்படத்தின் கதைக்களமானது முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனுஷ் இப்படத்தில் பிச்சைக்காரன் வேடத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் இந்தப் படமானது பான் இந்தியப் படமாக உருவாகியிருக்கிறது. மேலும் இப்படத்தில் நடிகர் நாகார்ஜுனாவின் ரோலில் மிக வித்தியாசமாக அமைந்திருக்கிறது. தனுஷின் இந்த குபேரா படமானது சுமார் ரூ.120 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் வெளியாகும் இப்படமானது நிச்சயமாக பான் இந்திய ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் தமிழ் டிக்கெட் ப்ரீ புக்கிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us