தனுஷின் டி54 படத்தின் டப்பிங் பணி தொடக்கம்.. படக்குழு வெளியிட்ட பதிவு வைரல்!

D54 Movie Dubbing Work: தனுஷின் நடிப்பில் மிக பிரம்மாண்டமான கதைக்களம் கொண்ட திரைப்படமாக உருவாகிவருவதுதான் டி54. இந்த படத்தில் தனுசுடன் நடிகை மமிதா பைஜூ இணைந்து நடித்துள்ள நிலையில், மாறுபட்ட கதைக்களத்தில் தயாராகிவருகிற்து. இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது டப்பிங் பணி சிறப்பாக தொடங்கியுள்ளது.

தனுஷின் டி54 படத்தின் டப்பிங் பணி தொடக்கம்.. படக்குழு வெளியிட்ட பதிவு வைரல்!

D54 படத்தின் டப்பிங் பணிகள்

Updated On: 

06 Jan 2026 21:07 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான போர் தொழில் (Por Thozhil) என்ற படத்தை இயக்கியிருந்தவர்தான் இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja). சீரியல் கில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படமானது இவருக்கு மிகவும் வரவேற்பை கொடுத்திருந்தது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக நுழைந்த விக்னேஷ் ராஜா, தனது இரண்டாவது படத்திலே நடிகர் தனுசுடன் (Dhanush) இணைந்துள்ளார். அந்த படம்தான் டி54 (D54). இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜூ (Mamiitha Baiju) நடித்துள்ளார். மேலும் இதில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு (Suraj Venjaramoodu) இணைந்தது நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 ஜூலை மாதத்தின் ஆரம்பத்தில் தொடங்கிய நிலையில், கடந்த 2025 டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் முழுமையாக நிறைவடைந்திருந்தது.

இதை படக்குழு கேக் வெட்டி ஒண்டாடிய வீடியோவும் கூட ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது. மேலும் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் டப்பிங் பணியும் தொடங்கியுள்ளதாம். இது குறித்த படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: சிலம்பரசனின் அரசன் படத்தில் நடிக்கிறாரா தனுஷ்? தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

தனுஷின் டி54 படத்தின் டப்பிங் பனி தொடக்கம் குறித்து வெளியான இன்ஸ்டாகிராம் பதிவு:

இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்க, வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் இப்படத்தை தயாரித்துவருகிறார். இந்த படமானது சுமார் ரூ 120 கோடி பட்ஜெட்டில் தயாராகிவரும் நிலையில், இதற்க்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்தான் இசையமைத்து வருகிறார். இவர் ஏற்கனவே தனுஷின் பல படங்களுக்கும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் நடிகர்கள் சூரஜ் வெஞ்சாரமூடு, மமிதா பைஜூ, ஜெயராம், கே.எஸ். ரவிக்குமார், பிரிவிதிவி பாண்டியராஜ் உட்பட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: சிலம்பரசனுக்கு ரொம்பவும் பிடித்த நடிகைகள் இவர்கள்தான் – வெங்கட் பிரபு உடைத்த உண்மை!

இந்த படமானது காதல் மற்றும் வித்தியாசமான கிராமத்து கதையில் அமைந்துள்ள நிலையில், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துவருகிறது. அதன்படி இப்படம் 2026 பிப்ரவரி மாதத்தின் இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியிருக்கும் நிலையில், விரைவில் தனுஷ் மற்றும் மமிதா பைஜூ உட்பட பல்வேறு நடிகர்களும் டப்பிங் செய்வார்கள் என கூறப்படுகிறது.

இந்திய சாலைகளை எப்படி கடக்க வேண்டும் என கற்றுக்கொடுக்கும் ரஷ்ய பெண் - வைரலாகும் வீடியோ
சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ஃபாஸ்ட் ஃபுட்டால் பறிபோன இளம்பெண்ணின் உயிர்
இனி KYC கட்டாயமில்லை.. நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பால் வாகன ஓட்டிகள் நிம்மதி
இந்தியாவின் மிக மெதுவாகச் செல்லும் ரயில் பயணம்.. எங்கு உள்ளது தெரியுமா?