Kara Movie: வன்முறையை விட்டு விலகும் ஹீரோ.. மீண்டும் அதே பாதையில்.. தனுஷின் கர படத்தின் ஸ்டோரி இதுதான் – வைரலாகும் தகவல்!

Dhanush Kara Movie Plot Leak : தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் தனுஷ். இவரின் நடிப்பிலும், இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்திலும் தயாராகியுள்ள படம்தான் கர. தற்போது இந்த திரைப்படத்தின் கதைக்களம் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

Kara Movie: வன்முறையை விட்டு விலகும் ஹீரோ.. மீண்டும் அதே பாதையில்.. தனுஷின் கர படத்தின் ஸ்டோரி இதுதான் - வைரலாகும் தகவல்!

கர திரைப்படம்

Updated On: 

27 Mar 2026 22:07 PM

 IST

நடிகர் தனுஷ் (Dhanush) மற்றும் விக்னேஷ் ராஜாவின் (Vignesh Raja) கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுயுள்ள திரைப்படம்தான் கர (Kara). இதை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படம் தயாராகியுள்ள நிலையில், முதல் பாடல் வாயா ஏய் கரசாமி (Vaayaa Ey Karasami) என்ற பாடல் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதை தொடர்ந்து இந்த படத்தின் கதாபாத்திர அறிமுகம் தொடர்பான போஸ்டர்களும் தினந்தோறும் வெளியாகிவருகிறது. இந்த படமானது மிகவும் வித்தியாசமான கதையில் தயாராகியுள்ளது. இதில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார்.

இவரும் இதுவரையில் எந்த திரைப்படங்களிலும் நடிக்காத வேடத்தில் நடித்துள்ளதாக இயக்குநரே தெரிவித்துள்ளார். அந்த விதத்தில் இந்த படத்தின் கதைக்களம் குறித்து இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளது. அது என்ன என்பது பற்றி விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: பா.ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படம் எப்போது ரிலீஸ் ஆகிறது? வைரலாகும் தகவல்

கர படத்தின் கதைக்களம் குறித்து இணையத்தில் கசிந்த தகவல்:

தனுஷின் கர திரைப்படமானது, 90ஸ் காலகட்டத்தில் வளைகுடா போரின்போது, தமிழ்நாட்டின் கடலோர பகுதியான ராமநாதபுரத்தில், எரிபொருள் நெருக்கடி மற்றும் தட்டுப்பாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.பல எரிபொருள் கிடங்குளாலும், போரின் காரணமாக இருந்துவரும் நிலையில், உயிர் வாழ்வதே சாத்தியமில்லாத ஒன்றாக இருக்குறது. ஒரு காலத்தில் அதிக வன்முறைகளில் இருந்த தனுஷின் கரசாமி கதாபாத்திரம், திருந்தி வாழ நினைத்தும், அவரை விடாமல் அந்த வன்முறை மீண்டும் துரத்துகிறது.

இதையும் படிங்க: ரீ-ரிலீஸாகும் நடிகர் சிம்புவின் சூப்பர் ஹிட் படம் – உற்சாகத்தில் ரசிகர்கள்

அந்த வாழ்க்கையிலிருந்து தப்பிக்க முயன்ற அவர், மீண்டும் அதே வாழ்க்கையில் தள்ளப்படுகிறார். தன் மக்களைப் பாதுகாத்து, பத்திரமாக வழிநடத்திச் செல்ல, அவன் ஒவ்வொரு அடியிலும் உள்ள ஆபத்துகளைக் கடந்து செல்ல வேண்டும் இவ்வாறான விறுவிறுப்பான கதைக்களத்தில் இப்படம் தயாராகியிருப்பதாக இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

தனுஷின் கர திரைப்படத்தின் கதாபாத்திரம் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

தனுஷின் இந்த கர திரைப்படமானது வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. இது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாம். இந்த படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், படத்திலிருந்து தொடர்ந்து அப்டேட் வெளியாகிவருகிறது.

Follow Us
அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் - அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு
அதிகரிக்கும் போர் பதற்றம்.. 5 நாள் கெடு கொடுத்த அதிபர் டிரம்ப்..
"முன்பே வா" ரெய்னாவிற்கு மட்டுமல்ல.. தோனிக்கும் ரொம்ப பிடிக்கும்!.. ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த சுவாரசியம்!
ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம் - துரந்தர் 2 படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்