தனுஷ் – எச்.வினோத் கூட்டணியில் புது திருப்பம்.. எச்.வினோத்தின் புது படம் யாருடன்?

H. Vinoth And Dhanush Movie Update: தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுபவர் எச்.வினோத். இவர் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் திரைப்படத்தை இயக்கியுள்ளர். இவர் தனுஷை வைத்து புது படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தனுஷ் - எச்.வினோத் கூட்டணியில் புது திருப்பம்.. எச்.வினோத்தின் புது படம் யாருடன்?

தனுஷ் மற்றும் எச் வினோத்

Updated On: 

02 Feb 2026 16:58 PM

 IST

கடந்த 2014ம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை (Sathuranga Vettai) என்ற திரைப்படத்தை இயக்கி, சினிமாவில் பிரபலமானவர் இயக்குநர் எச்.வினோத் (H. Vinoth). இவர் தமிழ் சினிமாவில் தற்போது பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் கார்த்தியின் (Karthi) தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இயக்கி, மக்களுக்கு மிகவும் நெருக்கமானார். இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக தொடர்ந்து தல அஜித் குமாருடன் (Ajith kumar) வலிமை மற்றும் துணிவு என இரு படங்களையும் இயக்கியிருந்தார். இதில் துணிவு படமானது நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படமானது தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) வாரிசு திரைப்படத்துடன் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேரடியாக மோதியிருந்தது. அந்த வரிசையில் இயக்குநர் எச். வினோத் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படத்தை (Jana Nayagan) இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தார்.

இந்த ஜன நாயகன் படமானது 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருந்த நிலையில், சென்சார் பிரச்சனைகள் தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இவர் ஜன நாயகன் படத்திற்கு பின் தனுஷுடன் (Dhanush) புது படத்தில் இணையவுள்ளார் என கூறப்பட்டு வந்த நிலையில், அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கயாடு லோஹரின் ‘பள்ளிச்சட்டம்பி’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தனுஷ் மற்றும் எச்.வினோத் இணையும் திரைப்பட அப்டேட் :

தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்திற்கு பின் தனுஷ் மற்றும் எச்.வினோத் கூட்டணி படமானது உருவாகும் என கூறப்பட்டுவந்தது. இந்நிலையில் தற்போது தனுஷ் தொடர்ந்து புது புது படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது இவர்களின் கூட்டணி படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போவதாக இணையத்தில் தகவல்கள் பரவிவருகிறது. எச்.வினோத் மற்றும் தனுஷ் இணையும் படத்தின் ஷூட்டிங் 2027ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: எழுத்தாளர் தமிழ் பிரபா உடன் இணையும் ஹரிஷ் கல்யாண் – வைரலாகும் தகவல்

அந்த விதத்தில் தற்போது இரு பெரிய நட்சத்திர நடிகர்களின் படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளதாக தற்போது வட்டாரங்களில் பேசப்பட்டுவருகிறது. அந்த நடிகர்களுடன் படத்தில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகிறதாம். அந்த நடிகர்கள் யார் என இன்னும் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

தனுஷ் மற்றும் எச்.வினோத் படம் குறித்து வைரலாகும் பதிவு:

தளபதி விஜய்யின் ஜன நாயகன் படமானது இன்னும் வெளியாகாத நிலையில், இப்படத்தின் ரிலீஸிற்கு பிறகே எச்.வினோத் தனது புது படத்தை குறித்து அறிவிப்பார் என கூறப்படுகிறது. அவர் இணையும் அந்த இரு பிரம்மாண்ட நடிகர்கள் யார் என்பது குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.15 லட்சம் செலவுசெய்து வளரப்பு நாயை ஆஸ்திரேலியா கொண்டு சென்ற இந்திய தம்பதி
அசாமில் 80 மீட்டர் பாலத்தை உருவாக்கிய அசாம் இளைஞர்
மரணத்திற்குப் பின்னும் வாழ்க்கை உண்டா? மரணத்தை வெல்ல நிபுணர்கள் முயற்சி
உருவாகிறது ரஜினிகாந்தின் பயோபிக்.. இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா?.. வந்தது குட்நியூஸ்!!