அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ… இன்ஸ்டாவை தெரிக்கவிடும் விக்ரம் போட்டோ!

Chiyaan Vikram: தமிழ் சினிமாவில் ஒரு நடிகரை அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்றால் அது விக்ரம் தான். அவர்கள் அஜித், விஜய், ரஜினி மற்றும் கமல் என யார் ரசிகர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் விக்ரம் பிடிக்கும். அப்படிப்பட்ட நடிகராக தான் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் நடிகர் விக்ரம்.

அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ... இன்ஸ்டாவை தெரிக்கவிடும் விக்ரம் போட்டோ!

விக்ரம்

Published: 

29 Aug 2025 22:56 PM

தமிழ் சினிமாவில் நடிகர், வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட் என ரசிகர்களிடையே நன்கு பிரபலம் ஆனவர் நடிகர் விக்ரம். இவரது உண்மையான பெயர் கென்னடி ஜான் விக்டர். தமிழ் சினிமாவில் இவர் நடிகராக அறிமுகம் ஆகும் போது இவரது பெயர் விக்ரம் என வைக்கப்பட்டது. கடந்த 1990-ம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் விக்ரம். அதன்படி கடந்த 1990-ம் ஆண்டு தொடங்கிய இவரது சினிமா வாழ்க்கை சுமார் 35 வருடங்களை கடந்து வெற்றிகரமாகவே செல்கிறது. தொடர்ந்து மக்களால் விக்ரம் என்று அழைக்கப்பட்ட நடிகர் விக்ரம் தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1999-ம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான வெளியான சேது படத்தில் இருந்து தான் நடிகர் விக்ரமிற்கு சியான் என்ற அடை மொழி அவரது பெயருடன் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் கல்லூரி மாணவனாக இருக்கும் நடிகர் விக்ரமை சியான் சியான் என்று அவரது நண்பர்கள் செல்லமாக அழைப்பார்கள். பின்பு அந்தப் பெயரே விக்ரமின் பெயராக மாறியது. பின்பு நடிகர் விகர்மும் தனது பெயருக்கு முன்னாள் சியானை சேர்த்து சியான் விக்ரம் என்றே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இறுதியாக நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் படம் ரசிகரக்ளிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் வைரலாகும் நடிகர் விக்ரமின் நியூ லுக்:

இந்த நிலையில் நடிகர் விக்ரம் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. 59 வயதாகும் நடிகர் விக்ரம் கட்டுமஸ்தான உடலுடன் இருக்கும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

தனது நடிப்பிற்காக மட்டும் ரசிகர்களிடையே நடிகர் விக்ரம் பாராட்டுகளைப் பெறவில்லை. ஒவ்வொரு படத்திற்கும் அந்த கதைகளுக்கு ஏற்ப தனது உடல் எடையை கூட்டவும், உடல் எடையை குறைப்பதும் என்று படத்திற்கா நடிகர் விக்ரம் எடுக்கும் மெனக்கெடல்களும் ரசிகரக்ளிடையே அவர் மீதான அன்பை அதிகரித்ததற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… ரீ ரிலீஸாகும் மாதவனின் சூப்பர் ஹிட் படம் ரன் – படக்குழு வெளியிட்ட புது அப்டேட்!

நடிகர் விக்ரமின் இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… காமெடியும் ஃபேண்டசியும் கலந்த இந்த படகலம் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?