Chiyaan Vikram: 23 வருடங்கள்.. விக்ரம் எடுத்த முக்கிய முடிவு.. வெற்றி தேடி வருமா?

Chiyaan 63 Movie: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சியான் விக்ரம். இவரின் நடிப்பில் தொடர்ந்து திரைப்படங்கள் உருவாகிவரும் நிலையில், கிட்டத்தட்ட 23 வருடத்திற்கு முன் செய்த விஷயத்தை தற்போது மீண்டும் கையில் எடுத்துள்ளார். அது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

Chiyaan Vikram: 23 வருடங்கள்.. விக்ரம் எடுத்த முக்கிய முடிவு.. வெற்றி தேடி வருமா?

சியான் விக்ரம்

Updated On: 

31 Oct 2025 16:04 PM

 IST

நடிகர் சியான் விக்ரம் (Chiyaan Vikram) நடிப்பில் தமிழ் மொழியில் தொடர்ந்து திரைப்படங்கள் உருவாகிவருகிறது. இவர் தமிழில் பிரம்மாண்ட இயக்குநர்களான மணிரத்னம் (Mani Ratnam) முதல் எஸ்.சங்கர் (S. Shankar) வரை பல இயக்குநர்களுடன் படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இவர் ஒரு பிரம்மாண்ட நடிகர் என்றும் கூறலாம். இவர் ஆரம்ப காலத்தில் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்துவந்தார். ஆனால் தற்போதும் முழுமையாக தமிழ் மொழியில் மட்டுமே திரைப்படங்ககளில் நடித்துவருகிறார்.

இவர் தனது திரைப்படத்திற்காக தன்னையே வருத்திக்கொள்ளும் அளவிற்கு பல்வேறு விஷயங்களை செய்து, பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அந்த வகையில் இவரின் நாடியில் இறுதியாக வெளியான திரைப்படம் வீர தீர சூரன் 2 (Veera Dheera Sooran 2). இந்த படத்தை இயக்குநர் அருண் குமார் (Arun Kumar) இயக்கியிருந்த நிலையில், கடந்த 2025 மார்ச் மாதத்தில் வெளியானது.

இதை அடுத்ததாக பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார். இந்நிலையில் இவர் சுமார் 23 வருடங்களுக்கு முன் செய்த விஷயத்தை தற்போது மீண்டும் செய்துள்ளார். அது என்னெவென்றால் அறிமுக இயக்குநரின் படத்தில் சியான் விக்ரம் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எனது மகன்களும் அதை செய்யவேண்டும்.. அதுதான் எனக்கு பெருமை – தனுஷ் சொன்ன விஷயம்!

சியான்63 திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு :

சியான விக்ரம் அறிமுக இயக்குநர் போடி கே ராஜ்குமார் இயக்கத்தில் ஒப்பந்தமாகியுள்ள படம்தான் சியான்63. இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் என்ற தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துவருகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் சமீபத்தில் வெளியான நிலையில், இப்படம் ஒரு கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்துடன் உருவாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் இயக்கும் நிலையில், விக்ரம் சுமார் 23 வருடங்களுக்கு பின் இந்த விஷயத்தை செய்துள்ளார்.

இதையும் படிங்க: ராஷ்மிகாவின் ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ – தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்?

இவர் இறுதியாக சாமுராய் என்ற படத்திற்காக அப்போதைய அறிமுக இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார். இப்படம் கடந்த 2002ம் ஆண்டில் வெளியானது. அந்த படத்தை அடுத்ததாக சுமார் 23 வருடங்களுக்கு பின் மீண்டும் அறிமுக இயக்குநரின் படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலானது தற்போது ராசிக்கல் மத்தியில் வைரலாகிவருகிறது.

சியான் விக்ரமின் புதிய படங்கள் :

சியான்63 படத்தை அடுத்தக் விக்ரம் ஒப்பந்தமாகியுள்ள படம் சியான்64. இப்படத்தை 96 திரைப்படத்தை இயக்கிய சி பிரேம் குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் ஐசரி கே கணேஷ் தயாரித்துவருகிறார். இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.