நவம்பர் 14-ம் தேதி ரீ ரிலீஸாகும் ஆட்டோகிராஃப் படம் – சேரன் வெளியிட்ட அப்டேட்
Autograph Movie Rerelease: தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வருபவர் சேரன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே போல இவரது இயக்கத்தில் வெளியான படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோகிராஃப்
சேரன் எழுதி இயக்கி கடந்த 2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஆட்டோகிராஃப் (Autograph Movie). இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் விம்ரசன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சேரன் நாயகனாகவும் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சேரன் உடன் இணைந்து நடிகர்கள் கோபிகா, சினேகா, கனிகா, மல்லிகா, இளவரசு, கருப்பையா பாரதி, கிருஷ்ணா, பெஞ்சமின், லிங்கேஸ்வரன், ராஜேஷ், விஜய சிங், பாண்டியன் ராஜ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் பலருக்கும் தங்களது மலரும் நினைவுகளை தூண்டும் விதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் தியேட்டர் சார்பாக நடிகர் சேரனே தயாரிப்பாளராக இந்தப் படத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பும் ரசிகர்களிடையே அதிக அளவில் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரீ ரிலீஸாகும் ஆட்டோகிராஃப் படம்:
இந்த ஆட்டோகிராஃப் படம் திரையரங்குகளில் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படம் தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் ஒரு நபரின் சிறு வயதில் இருந்து இளமை பருவம் வரை வாழ்க்கையில் என்ன என்ன எல்லாம் நடக்கிறது என்பது குறித்து எடுக்கப்பட்டு இருந்தது.
மேலும் இந்தப் படம் வெளியான போது பலரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மீண்டும் நினைவுப்படுத்தும் விதமாக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இந்தப் படம் மீண்டும் நவம்பர் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சேரன் தெரிவித்துள்ளார்.
Also read… 31 ஆண்டுகளை நிறைவு செய்த நாட்டாமை படம்… நடிகர் சரத்குமாரின் நெகிழ்ச்சிப் பதிவு!
சேரன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Autograph is back after 21 years – now with digitally remastered!
Re-releasing in Theatres across TN on Nov 14th ✍️❤️#AutographFromNov14 @actress_Sneha #Gobika #Mallika #Kanika #Rajesh @dop_ravivarman @vijaymilton pic.twitter.com/FcBDcP0DXT
— Cheran Pandiyan (@CheranDirector) November 3, 2025
Also read… உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் மார்ஷல் படம் – வைரலாகும் தகவல்