Jana Nayagan: ரசிகர்களுக்கு ஷாக் தகவல்… ஜன நாயகன் படத்தில் மியூட் செய்யப்பட்ட வசனங்கள் – சென்சார் குழு அதிரடி!

Jana Nayagan Censor Board Issues: நடிகர் விஜய்யின் நடிப்பில் கடைசி திரைப்படமாக வெளியாக காத்திருப்பதுதான் ஜன நாயகன். இந்த படமானது சென்சார் பிரச்சனையின் காரணமாக இன்னும் ரிலீஸ் செய்யாமல் இருக்கிறது. அந்த வகையில் தற்போது சென்சார் குழு அதிரடி செயலின்படி, இப்படத்தில் சில வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளதாம்.

Jana Nayagan: ரசிகர்களுக்கு ஷாக் தகவல்... ஜன நாயகன் படத்தில் மியூட் செய்யப்பட்ட வசனங்கள் - சென்சார் குழு அதிரடி!

ஜன நாயகன் சென்சார் சிக்கல்கள்

Updated On: 

21 Mar 2026 15:29 PM

 IST

தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் வெளியாகுமா? அல்லது வெளியாகாதா? என தொடர்ந்து சந்தேகத்தை ஏற்படுத்திவரும் திரைப்படம் “ஜன நாயகன்” (Jana Nayagan). இந்த படத்தில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முன்னணி கதாநாயகனாக நடித்திருக்கும் நிலையில், இயக்குநர் எச்.வினோத் (H. Vinoth) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் இந்த படமானது முற்றிலும் அரசியல், ஆக்ஷன் மற்றும் பெண் பாதுகாப்பு போன்ற கதைக்களத்தில் அமைந்துள்ளது. இந்த படத்தில் தளபதி விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக “கயல்” என்ற வேடத்தில் நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். மேலும் விஜய்யின் மகளாக நடிகை மமிதா பைஜூ (Mamitha baiju), அவருடன் நடிகர்கள் நரேஷன், பிரியாமணி, பாபிதியோல், ஸ்ருதி ஹாசன் என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில், இப்படத்திலிருந்து இதுவரை 4 பாடல்கள் வெளியாகியிருக்கிறது.

மேலும் கடந்த 2026 ஜனவரி 9ம் தேதியில் வெளியாகவேண்டிய இப்படம் 2 மாதங்கள் கடந்தும் இன்னும் ரிலீஸ் தேதி உறுதியாகவில்லை. சென்சார் பிரச்சனை ஓரளவு நிறைவுக்கு வரும் நிலையில், தற்போது இப்படத்திலிருந்து சில வசனங்களை மியூட் செய்ய சொல்லி சென்சார் வாரியம் (Censor Board) அதிரடி உத்தரவை கொடுத்துள்ளாராம்.

இதையும் படிங்க: சிலம்பரசனின் STR51 படத்தின் டைட்டில் இதுவா? படத்தின் ஷூட்டிங் எப்போது தொடக்கம் தெரியுமா?

ஜன நாயகன் திரைப்படத்தில் மியூட் செய்யப்பட்ட வசனங்கள் குறித்த தகவல்:

விஜய்யின் ஜன நாயகனை படத்தில் சில அரசியல் தொடர்பான வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளதாம். மேலும் ஜன நாயகன் படத்தில் நெல்சன் திலீப்குமார், அட்லீ, மற்றும் லோகேஷ் கனகராஜ் மூவரும் பத்திரிகையாளர்களாக இடம்பெற்றிருக்கும் வசனங்கள் சில நீக்கப்பட்டுள்ளதாம். அந்த காட்சியில் விஜயை நோக்கி, அவர்கள் எழுப்பப்படும் அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், மறு ஆய்வுக்குழு இதை நீக்கும்படி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இனி ஹீரோ மட்டும் கிடையாது.. அஜித் குமாரின் புதிய அவதாரம்.. என்னனு தெரியுமா?

மேலும் மறு ஆய்வுக்குழு ஜன நாயகன் திரைப்படத்தை பார்த்து பல திருத்தங்களை சொன்னதாகவும், தேர்தல் நெருங்கிய நிலையில், தலைமை தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்றுத்தான் இந்த படத்தை வெளியிடமுடியும் என கூறப்படுகிறது. அந்த வகையில் தளபதி விஜய்யின் ஜன நாயகனை படமானது வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதி (தேர்தலுக்கு பிறகு) அல்லது மே மாதத்தின் தொடக்கத்தில் வெளியிடுவதற்காக படக்குழு திட்டமிட்டுவருகிறதாம்.

ஜன நாயகன் திரைப்படம் குறித்து வைரலாகும் பதிவு:

ஜன நாயகன் திரைப்படத்தின் காட்சிகள் சில நீக்கப்பட்டுள்ள நிலையில், தளபதி விஜய் தனியாக மும்பை சென்றதாகவும், அங்கு ஜன நாயகன் பட காட்சிகளை சிலவற்றை மீண்டும் எடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால் அவர் இயக்குநர் அட்லீ மற்றும் பிரியா தம்பதியின் 2வது பேபி ஷவருக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேல் தளபதி விஜய் படம் நடிப்பாரா? மாட்டாரா என்பது கேள்விக்குறிதான்.

Follow Us
Related Stories
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்