மீண்டும் பிக்பாஸில் வெடித்த பேட் டச் சண்டை… வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர்களிடையே போட்டியும் சூடுபிடித்துள்ளது. அதன்படி இன்று 85-வது நாளிற்கான புரோமோ வீடியோ வெளியாகி உள்ள நிலையில் போட்டியாளர்கள் இடையே ஏற்படும் சண்டை வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ்
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இந்த நிகழ்ச்சியில் தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். வைல்கார்ட் போட்டியாளர்களுடன் மொத்தம் 24 பேர் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னதாக நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், பிரவீன் ராஜ், துஷார், திவாகர், கெமி, பிரஜன், வியானா, ரம்யா, எஃப்,ஜே, அமித் மற்றும் கனி என மொத்தம் 15 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் தற்போது அரோரா, திவ்யா, சுபிக்ஷா, சபரி, சாண்ட்ரா, வினோத், கம்ருதின், விக்ரம் மற்றும் பார்வதி என மொத்தம் 9 போட்டியாளர்களே எஞ்சியுள்ளனர். அதன்படி இந்த நிகழ்ச்சி தொடங்கி தற்போது 12 வாரங்கள் முடிவடைந்து 13-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான ஓபன் நாமினேஷன் நடைப்பெற்றது.
அதன்படி இந்த ஓபன் நாமினேஷனில் பிக்பாஸ் வீட்டில் உள்ள அரோரா, திவ்யா, சுபிக்ஷா, சபரி, சாண்ட்ரா, வினோத், கம்ருதின், விக்ரம் மற்றும் பார்வதி என மொத்தம் 9 போட்டியாளர்களும் நாமினேட் ஆகியுள்ளனர். இதில் யார் இந்தப் போட்டியில் இருந்து வெளியேறுவார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற வார இறுதியில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் பிக்பாஸில் வெடித்த பேட் டச் சண்டை:
இந்த நிலையில் இந்த பிக்பாஸ் வீட்டில் காதல் பறவைகளாக இருக்கும் கம்ருதின் மற்றும் பார்வதி இடையே தற்போது சல சலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கம்ருதின் தன்னை பேட் டச் செய்ததாக முன்பு தெரிவித்து இருந்தார். இது கம்ருதினுக்கு தெரியவர சண்டை தொடங்கியது. அதன்படி தற்போது மீண்டும் அந்த சண்டை தொடங்கியது. இதில் கம்ருதின், பார்வதி மற்றும் அரோரா இடையே மீண்டும் சண்டை வெடித்தது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… டிஆர்பியில் டாப் 5 இடங்களை தட்டித்தூக்கிய சன் டிவி… எந்த சீரியல் எந்த இடம் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day85 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/PLeRRNS00o
— Vijay Television (@vijaytelevision) December 29, 2025