கம்ருதினால் பிக்பாஸ் வீட்டில் தொடரும் சண்டை… வைரலாகும் வீடியோ!

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஜமீன்தார் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து போட்டிபோட்டுகின்றனர். டாஸ்க் மட்டும் இன்றி தொடர்ந்து சண்டையையும் விட்டுகொடுக்காமல் போட்டியாளர்கள் போட்டு வருகின்றனர்.

கம்ருதினால் பிக்பாஸ் வீட்டில் தொடரும் சண்டை... வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ்

Published: 

03 Dec 2025 18:06 PM

 IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே இந்த நிகழ்ச்சி மீது ரசிகர்களுக்கு தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் இருந்து வருகின்றது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு டாக்ஸிக்கான பல விசயங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே நெகட்டிவ் விமர்சனம் பெற்று வருவதால் தொடர்ந்து அதனை மாற்றுவதற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி குழு பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக அதாவது 7-வது மற்றும் 8-வது வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதற்கு நன்ராக உள்ளது. டாக்ஸிக்கான விசயங்கள் எதுவும் இல்லாமல் மகிழ்ச்சியா இருக்கிறது பார்ப்பதற்கு என்று பிக்பாஸ் பார்வையாளர்கள் தொடர்ந்து தங்களது விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். மேலும் வார இறுதியில் வந்த விஜய் சேதுபதியும் போட்டியாளர்களை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மூன்றாவது வாரம் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதிரை இந்த வாரம் மீண்டும் வைல்கார்ட் போட்டியாளராக உள்ளே நுழைந்துள்ளார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான அதாவது 9-வது வாரத்திற்கான வீட்டு தல போட்டியில் ரம்யோ ஜோ வெற்றிப் பெற்ற நிலையில் அவர் இந்த வாரத்தில் வீட்டு தலையாக உள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான டாஸ்காக பிக்பாஸ் வீடு ஜமீன்தார் வீடாக மாறியது. இந்த நிலையில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து போட்டிப்போடுகின்றனர். இதில் வெற்றிப் பெறும் அணி அடுத்த வாரத்திற்கான தல போட்டியில் கலந்துகொள்ள முடியும். தோல்வியடையும் அணியில் உள்ள அனைவரும் நேரடியாக நாமினேஷனில் இடம் பிடிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் கம்ருதினால் தொடரும் சண்டை:

இந்த நிலையில் இந்த வாரம் இந்த டாஸ்க் தொடங்கும் போதே சண்டையும் தொடங்கியது. அதன்படி இந்த வாரம் வீட்டில் உள்ள கம்ருதின் முன்னதாக திவ்யாவிடம் சண்டையிடம் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில் இன்று வீட்டு தலையாக உள்ள ரம்யா ஜோவிடம் தற்போது சண்டையிடுகிறார். இது தொடர்பான வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

Also Read… வேள்பாரி நாவலை படமாக்க தயாராகும் இயக்குநர் சங்கர்… இணையத்தில் கசிந்த தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… என் ரசிகர்கள் என்னை வழிபாடு செய்வதை நான் விரும்பவில்லை – சிவகார்த்திகேயன்

மீண்டும் இணையும் பேட்ட காம்போ! - ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதி?
பிரணவ் மோகன்லாலின் டைஸ் ஐரே - ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
இலங்கை, இந்தோனேசியாவை தாக்கிய இரட்டை புயல்கள் - 350க்கும் மேற்பட்டோர் பலி
முதல்நாளே வசூலை குவித்த ‘தேரே இஷ்க் மே’.. இந்தியில் சாம்ராஜ்யம் படைக்கும் தனுஷ்!!