என்ன பத்தி பேச ஒரு தராதாரம் வேணும்… பிக்பாஸில் ரம்யா ஜோவை வம்புக்கு இழுத்த திவாகர்

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் ஒன்பது நிகழ்ச்சியி தற்போது 25-வது நாளை எட்டியுள்ளது. அதன்படி இன்று வீட்டில் ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் திவாகர் மற்றும் ரம்யா ஜோ இடையே சண்டை ஏற்படும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.

என்ன பத்தி பேச ஒரு தராதாரம் வேணும்... பிக்பாஸில் ரம்யா ஜோவை வம்புக்கு இழுத்த திவாகர்

பிக்பாஸ்

Published: 

30 Oct 2025 11:30 AM

 IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9)நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 25 நாட்களை கடந்துள்ளது. இந்த சீசனில் பல டாக்ஸிக்கான நபர்கள் இருக்கிறார்கள் என்று மக்களிடையே விமர்சனங்களும் எழுந்து வருகின்றது. மேலும் முன்னதாக ஒளிபரப்பான 8 சீசன்களிலும் சண்டை நடக்காமல் இல்லை. ஆனால் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைக்கும் அளவிற்கு மிகவும் மோசமாக நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை. மேலும் இந்த சீசனில் ஃபன் மோட் என்ற ஒன்றே அரிதாக உள்ளது போல ரசிகர்கள் தொடர்ந்து நெகட்டிவான விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர். மூன்று வாரங்களாக விஜய் சேதுபதியும் போட்டியாளர்களிடையே நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து போட்டியாளர்களுக்கு நிகழ்ச்சி எவ்வளவு  போராக உள்ளது என்றும் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைக்கும் விதமாக உள்ளதாகவும் தெரிவித்தாலும் போட்டியாளர்கள் அதனை காதிலே வாங்காமல் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதையே செய்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த 4-வது வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டு தலயாக பிரவீன் ராஜ் தேர்வானார். அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் வீட்டை ஆர்மி கேம்ப் மாதிரி மாற்ற போகிறேன் என்று கூறியதால் பிக்பாஸ் குழு ஒரு முடிவு செய்து வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான உடையை வழங்கி அவர்களை நிஜமான ஆர்மி கேம்ப் போல மாற்றியது. ஆனால் பிரவீன் சொன்னது நடந்துதா என்றால் அதுதான் இல்லை. வீட்டு தலையின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து சலசலப்பு ஏற்பட்டுதான் வருகின்றது.

என்ன பத்தி பேச ஒரு தராதாரம் வேணும்:

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் ஒரு டாஸ்க் வழங்குகிறார். அதில் சாப்பிடுவது தூங்குவது இதைத் தவிற எதுவும் செய்யாதது யார் என்று கேட்க அதற்கு ரம்யா ஜோ திவாகர் மற்றும் பார்வதி பெயரைக் கூறுகிறார். இதனால் கடுப்பான திவாகர் ரம்யா ஜோவை பார்த்து என்னை பத்தி பேச ஒரு தராதாரம் வேண்டும் என்று தெரிவித்தார். இதனால் வீட்டில் உள்ளவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இது தொடர்பானா வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… பைசன் படத்துல எனக்கு அங்கீகாரம் கிடைச்சதுல சந்தோஷம் – நிவாஸ் கே பிரசன்னா

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சிரஞ்சீவி படத்தில் நான் நடிக்கிறேனா? மாளவிகா மோகனன் விளக்கம்