Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த வீட்டு ஓனர் மாதிரி பேசுறாரு… கானா வினோத்தை குறை கூறும் ஹவுஸ்மேட்ஸ்

Bigg Boss 9 Viral Promo : இந்த பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் பைனல் வீக் நடந்துவரும் நிலையில், வினோத்தின் செயலை மற்றப்போட்டியாளர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இது தொடர்பான புரோமோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இந்த வீட்டு  ஓனர் மாதிரி பேசுறாரு… கானா வினோத்தை குறை கூறும் ஹவுஸ்மேட்ஸ்
பிக் பாஸ் 9
Barath Murugan
Barath Murugan | Published: 07 Jan 2026 14:48 PM IST

தமிழில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக கலக்கிவருவது பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் ஒளிபரப்பப்பட்டுவருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil) நிகழ்ச்சியானது கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஆரம்பமான நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியில் மொத்தமாக 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், அதில் 3 போட்டியாளர்கள் மட்டுமே இறுதிக்கட்டத்தை எட்டுவார்கள். இந்நிலையில் இன்னும் 2 வாரத்தில் இந்த நிகழ்ச்சியானது முடிவடையும் நிலையில், இந்த சீசன் 9ன் முன்னாள் போட்டியாளர்கள் செலிபிரேஷன் வீக்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த பிக் பாஸ் வீடே கலைக்கட்டியுள்ளது.

அந்த விதத்தில் சமீப நாட்களாக கானா வினோத் (Gaana Vinoth) அதிகமாக பேசுவதாகவும், மற்றவர்களின் மனதை புண்படுத்தும்படி பேசுவதாகவும் திவ்யா (Divya) மற்றப் போட்டியாளர்களான விக்கல்ஸ் விக்ரம், சபரி மற்றும் அரோராவிடம் கூறினார். மேலும், அவர் வெளியே சென்றதும் சபரி மற்றும் திவ்யாவை பற்றியும் தவறாக பேசியுள்ளார். இது தொடர்பான புரோமோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: பிக் பாஸ் பைனல் போட்டியாளர்களைப் போட்டு தாக்கிய பழைய போட்டியாளர்கள்.. வைரலாகும் புரோமோ!

பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியின் 94வது நாளின் 2வது புரோமோ பதிவு

இந்த புரோமோவில் திவ்யா, “கானா வினோத் அண்ணா, வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் குறித்து அவர் முன்னிலையில் அதிகமாக பேசிவிடுகிறார். அது கேட்பதற்கு நன்றாக இல்லை” என்று தெரிவித்திருந்தார். இதை கேட்டுக்கொண்டிருந்த விக்ரம், அரோரா மற்றும் சபரி மூவரும் அவர் அவரின் கருத்துக்களை தெரிவித்தனர். இதில் அரோரா, “கானா வினோத் அண்ணா இந்த வீட்டின் ஓனர் மாதிரி பேசுறாரு” என கூறியிருந்தார்.

இதையும் படிங்க: ஜாய் கிரிசில்டாவிற்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கு – அதிரடி உத்தரவை கொடுத்த உயர்நீதிமன்றம்!

தனது கருத்தை தெரிவித்துவிட்டு திவ்யா வெளியே சென்ற நிலையில், உடனே சபரி , “இந்த அம்மாவும் இப்படித்தான்” என பேசியிருந்தார். இதற்கு விக்கல்ஸ் விக்ரம் ஆமாம் என கூறி சிரித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது ரசிகர்களிடையே தீயாக பரவிவருகிறது. மேலும் திவ்யாவின் ஆதரவாளர்களும் தங்களின் கருத்துக்களையும் வெளியிட்டுவருகின்றனர்.