எதுக்கெடுத்தாலும் பதட்டம்.. இன்று போட்டியாளர்களை பதறவிடும் விஜய் சேதுபதி!
Bigg Boss Tamil Season 9: தமிழில் மிகவும் சிறப்பான நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிவருவது பிக்பாஸ் சீசன் 9. இந்த நிகழ்ச்சியானது கடந்த 2025 அக்டோபர் மாதத்திலிருந்து தொடங்கிய நிலையில், இன்று இவரை சிறப்பாகவே வெளியாகிவருகிறது. இந்நிலையில் இன்று வார இறுதியான நிலையில், விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். இது தொடர்பான புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) கடந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி முதல் தொகுப்பாளராக தொகுத்து வருகிறார். அதற்கு முன் பிக் பாஸ் தமிழ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவந்தார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது தமிழ் மக்களிடையே அதிகம் விரும்பக்கூடிய ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருகிறது. தற்போது இந்த 2025ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 9 (Bigg Boss Season 9) நிகழ்ச்சியானது, கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. இதுவரை வெளியான பிக்பாஸ் தமிழ் சீசன்களிலே இந்த சீசன் மிகவும் மோசமான சீசன் என்று ரசிகர்கள் பேசிவருகின்றனர். இந்த சீசனில் எதற்கு எடுத்தாலும் சண்டைதான். அந்த வகையில் இந்த சீசன் ஒப்பளிப்பரப்பாக தொடங்கி இன்றோடு கிட்டத்தட்ட 62 நாட்களாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியானது தற்போதும் சிறப்பாகவே ஒளிபரப்பாகியருகிறது.
மொத்தம் 20 போட்டியாளர்கள் மற்றும் 4 வைல்ட்கார்ட் என்டரி போட்டியாளர்களுடன் இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், தற்போது வெறும் 16 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த 9வது வாரத்த்தில் டபுள் ஏவிக்ஷன் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று 2025 டிசம்பர் 6ம் தேதியில் வெளியான முதல் புரோமோவில் விஜய் சேதுபதி பேசிய வீடியோ வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: பெரிய பட்ஜெட்டில் தயாராகும் நடிகர் விஜய் சேதுபதியின் படம்? வைரலாகும் தகவல்
பிக் பாஸ் சீசன் 9 தமிழ் 62வது நாளின் முதல் புரோமோ வீடியோ பதிவு :
#Day62 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/RBuwtD8zqe
— Vijay Television (@vijaytelevision) December 6, 2025
இந்த புரோமோவில் விஜய் சேதுபதி, இந்த வாரத்தில் “வீட்டில் போட்டியாளர்கள் எதற்கு எடுத்தாலும் பதட்டம், மேலும் பதட்டமாக இருக்கும் புலவர் கதாபாத்திரம் வீட்டில் ஒருவருக்குத்தான் கொடுத்தோம். அது எல்லாருக்கும் பரவிவிட்டதாகவும், அந்த பதட்டத்தை எல்லாம் ஓர் வெள்ளை பாக்கெட்டில் போட்டு இன்னைக்கி விசாரிப்போம்” என மாஸாக விஜய் சேதுபதி பேசியுள்ளார். இந்நிலையில் இன்று 2025 டிசம்பர் 6ம் தேதியில் வெளியாகும் எபிசோட் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஜாலி டூ மீட் யூ… காமெடி, ஆக்ஷன், ரொமாண்டிக் பாணியில் வெளியானது வா வாத்தியார் பட ட்ரெய்லர்
இந்த பிக் பாஸ் வீட்டில் நேற்று நடந்த பிரச்சனை மிகவும் மோசமாகவே இருந்தது என்றே கூறலாம். பார்வதி மற்றும் அரோரா இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சனை மிகவும் ரசிகர்களிடையே பேசப்பட்டிருந்தது. மேலும் மற்ற சீசன்களை ஒப்பிடும்போது இந்த பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியானது மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வி.ஜே.பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் வெளியேற்றப்பட்டால் நிகழ்ச்சி நன்றாக போகும் என்று சமூக ஊடகங்களில் தங்களின் கருத்தை மக்கள் தெரிவித்துவருகின்றனர்.