Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Benz : ‘பென்ஸ்’ படம் முழுவதும் லோகேஷ் கனகராஜின் கதை இல்லை.. இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் பேச்சு!

Bakkiyaraj kannan About Lokesh Kanagaraj : ரெமோ மற்றும் சுல்தான் போன்ற படங்களை இயக்கி தமிழ் மக்களிடையே பிரபலமானவர் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். இவரின் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் நிவின் பாலி நடித்துவரும் படம் பென்ஸ். இப்படத்தின் கதை லோகேஷ் கனகராஜுடையது என்று கூறப்படும் நிலையில், பாக்கியராஜ் கண்ணன் விளக்கம் கொடுத்துள்ளார்.

Benz : ‘பென்ஸ்’ படம் முழுவதும் லோகேஷ் கனகராஜின் கதை இல்லை..  இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் பேச்சு!
இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 07 Jun 2025 20:25 PM

கோலிவுட் சினிமாவில் நடனக் கலைஞர், நடிகர் மற்றும் இயக்குநர் என இருந்து வருபவர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (Jigarthanda Double X). இப்படத்தை ரெட்ரோ படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார். கடந்த 2023ம் ஆண்டு வெளியான இப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் ராகவா லாரன்ஸிற்கு ஜோடியாக நடிகை நிமிஷா சஜயன் நடித்திருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அதில் அவர் ஒப்பந்தமான எதிர்பார்ப்பை உருவாக்கிய படம்தான் பென்ஸ் (Benz). இப்படத்தை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் (Bakkiyaraj kannan) இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகள் கடந்த 2025, மே இறுதியில் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து இப்படத்தில் மேலும் நடிகர் நிவின் பாலியும் முன்னணி வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளார் என்று படக்குழு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இப்படங்களின் அப்டேட்டை தொடர்ந்து, இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், பென்ஸ் படத்தின் கதையை முழுவதுமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதையை எழுதவில்லை, தானும் இணைந்து அதை எழுதியிருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பென்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

பென்ஸ் படத்தின் கதை பற்றி இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் பேச்சு

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், பென்ஸ் படத்தின் கதைக்களம் பற்றி பேசியிருக்கிறார். அதில் அவர் “இயக்குநர் லோகேஷ் கனகராஜும் நானும் நெருங்கிய நண்பர்கள். அவரின் LCU பட தொகுப்பில் உருவாகும் படங்களை மற்ற இயக்குநர்களும் இயக்கவேண்டும் என்று புதிய யோசனையை அவர்தான் கொடுத்தார். இந்த பென்ஸ் படமானது LCU படங்களுக்கு இணையான ஒரு படமாக உருவாகிவருகிறது. மேலும் மற்ற LCU படங்களின் முன்னுரையோ அல்லது தொடர்ச்சியே இப்படம் கிடையாது.

இப்படத்தின் அடிப்படை கதை இயக்குநர் லோகேஷுடையதாக இருந்தாலும், நானும் இதில் பணியாற்றி கதையை எழுதியிருக்கிறேன்.ஹாலிவுட் சினிமாவில் இயக்குநர்கள் பலர் தங்களின் படங்களை ஒரு யுனிவர்ஸ் தொகுப்பாக உருவாகிவருகின்றனர். தற்போது அதுபோன்ற வாய்ப்பு இந்திய சினிமாவிலும் முன்னேறி வருகிறது” என்று இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் பேசியிருந்தார்.

பென்ஸ் படம் :

இந்த பென்ஸ் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரித்தும், கதையை எழுதியும் இருக்கிறார். இப்படத்தை ரெமோ, சுல்தான் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ளார். இதில் முன்னணி நடிகர்களாக ராகவா லாரன்ஸ் மற்றும் நிவின் பாலியும் இணைந்து நடிக்கவிருக்கின்றனர்.

இப்படத்தில் மூன்று நகைகள் என்று கூறப்படும் இலையில், அதில் வாத்தி படத்தில் நடித்த நடிகை சம்யுக்தாவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.