நடிகர் விஜய் முன்னதாக போலீஸ் வேடத்தில் நடித்தப் படங்களின் லிஸ்ட் இதோ

Thanalapthy Vijay: நடிகர் விஜயின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜன நாயகன். இந்தப் படத்தில் இருந்து நடிகர் விஜயின் கதாப்பாத்திர வீடியோவைப் படக்குழு வெளியிட்டது. இதில் நடிகர் விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த நிலையில் முன்னதாக அவர் காவல் துறை அதிகாரியாக நடித்தப் படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

நடிகர் விஜய் முன்னதாக போலீஸ் வேடத்தில் நடித்தப் படங்களின் லிஸ்ட் இதோ

நடிகர் விஜய்

Updated On: 

22 Jun 2025 18:57 PM

 IST

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உறுவாகி வருகின்றது ஜன நாயகன். இந்தப் படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகிறார். விஜயின் நடிப்பில் இறுதியாக வெளியாக உள்ள இந்தப் படத்தை கேவிஎன் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகின்றது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து வரும் நிலையில் படத்தில் நாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜயின் 51-வது பிறந்த நாள் இன்று ஜூன் மாதம் 22-ம் தேதி 2025-ம் ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும் விஜயின் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாகவும் ஜன நாயகன் படத்தில் இருந்து விஜயின் கதப்பாத்திர வீடியோ வெளியானது.

அந்த வீடியோவின் மூலம் நடிகர் விஜய் இந்தப் படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் முன்னதாக நடிகர் விஜய் காவல் துறை அதிகாரியாக எத்தனை படங்களில் நடித்துள்ளார் என்பது குறித்து தற்போது இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

ஜன நாயகன் படத்தில் விஜயின் அறிமுக வீடியோ:

போக்கிரி: நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் போக்கிரி. விஜய் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ள இந்தப் படத்தை பிரபு தேவா இயக்கி இருந்தார். படத்திற்கு திரைக்கதையை பூரி ஜெகன்நாத் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நாயகியாக நடிகை அசின் நடித்து இருந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஜில்லா: நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஜில்லா. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.டி.நேசன் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகை காஜல் அகர்வால் நாயகியாக நடித்து இருந்த நிலையில் நடிகர் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார்.

தெரி: நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தெரி. இந்தப் படத்தை இயக்குநர் அட்லி எழுதி இயக்கி இருந்தார். இதில் நடிகை சமந்தா நடிகர் விஜயின் நாயகியாக நடித்து இருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராதிகா, மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை