கர்நாடகாவில் ரஜினிகாந்தின் கூலி படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்!

Super Star Rajinikanth: சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கூலி. இந்தப் படத்தின் ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை என வியாபாரம் சூடு பிடித்துள்ள நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெளியீட்டு உரிமையும் சூடு பிடித்துள்ளது.

கர்நாடகாவில் ரஜினிகாந்தின் கூலி படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்!

ரஜினிகாந்தின் கூலி

Published: 

01 Jul 2025 20:46 PM

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் (Actor Rajinikanth) நடிப்பில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் கேங்ஸ்டர் கதையில் தயாராகி உள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகர்ஜுனா, அமீர் கான், சௌபின் சாஹிர், உப்பேந்திரா ராவ் என பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள்னார். படம் தொடர்பான அப்டேட்களை கூலி படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 50 நாட்கள் கூட இல்லாத நிலையில் படத்தின் ஓடிடி உரிமை, சாட்டிலை உரிமை மற்றும் வெளியீட்டு உரிமை என வியாபாரம் படு ஜோராக நடைப்பெற்று வருகின்றது.

விறுவிறுப்பாக விற்பனையாகி வரும் கூலி படத்தின் வெளியீட்டு உரிமை:

தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் கூலி படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றது யார் என்று படக்குழு தங்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கர்நாடகாவில் கூலி படத்தின் வெளியீட்டு உரிமையை ஏவி மீடியா கன்சல்டன்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த ஏவி மீடியா கன்சல்டன்சி நிறுவனம் முன்னதாக நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்
வெளியான ஜெயிலர் மற்றும் வேட்டையன் ஆகிய படங்களின் கர்நாடக வெளியீட்டு உரிமையை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கூலி படத்தின் உரிமையை பெற்றதால் தொடர்ந்து மூன்றாவது முறையாக ரஜினிகாந்தின் படத்தை இந்த நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

கூலி படத்தின் கர்நாடக வெளியீட்டு உரிமை குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 27-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் படத்தின் அடுத்த சிங்கிள் எப்போது வெளியாகும் என்றும் ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.