இமையே… இமையே… 12 ஆண்டுகளை நிறைவு செய்தது அட்லியின் ராஜா ராணி படம்

12 Years of Raja Rani: தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பாலிவுட் வரை மிகவும் பிரபலமான இயக்குநராக இருப்பவர் இயக்குநர் அட்லி குமார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன ராஜா ராணி படம் தற்போது வெளியாகி 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இமையே... இமையே... 12 ஆண்டுகளை நிறைவு செய்தது அட்லியின் ராஜா ராணி படம்

ராஜா ராணி

Published: 

27 Sep 2025 16:20 PM

 IST

பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அட்லி (Director Atlee). இவரது இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு 27-ம் தேதி செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான படம் ராஜா ராணி. இந்தப் படத்தின் மூலம் தான் இயக்குநர் அட்லி சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர்கள் ஆர்யா, நயன்தாரா, ஜெய் மற்றும் நஸ்ரியா நசீம் முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சந்தானம், சத்யன், சத்யராஜ், ராஜேந்திரன், மனோபாலா, தன்யா, மிஷா கோஷல், அருண்ராஜா, சிங்கமுத்து, வோங், சுவாமிநாதன், டி.எம்.கார்த்திக், ஜாங்கிரி மதுமிதா, கே. புஜ்ஜி பாபு, பாண்டியன், பிரதீப் கோட்டயம், செல்லதுரை, பிரேமா பிரியா, சாய் தீனா, சாக்ஷி அகர்வால், கானா பாலா என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ. ஆர். முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளரும் இயக்குநருமான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைப் போல படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இயக்குநராக அட்லி அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது சினிமாவில் அடுத்ததடுத்தப் படங்களை அவர் இயக்க உதவியாக இருந்தது.

ராஜா ராணி படத்தின் கதை என்ன?

நடிகர் ஆர்யா மற்றும் நயன்தாரா இருவரும் காதல் தோல்விக்கு பிறகு சோகத்தில் இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் அவர்களின் குடும்பத்தினர் கன்வின்ஸ் செய்து திருமணம் செய்து வைக்கிறார்கள். விருப்பமே இல்லாமல் திருமணம் செய்துகொள்ளும் இவர்களின் வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதே படத்தின் கதை. ரொமாண்டிக் காமெடி ட்ராமாவாக வெளியான இந்தப் படம் தற்போது 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை படக்குழு தற்போது கொண்டாடி வருகின்றது.

Also Read… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சாய் பல்லவி – வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… யாரோ இவன் யாரோ… ஓர் ஆண்டை நிறைவு செய்த மெய்யழகன் படம்